மார்ச் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 3 கிரிகோரியன் ஆண்டின் 62ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 63ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1575 - இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
- 1833 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
- 1857 - பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
- 1878 - ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.
- 1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.
- 1918 - முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
- 1923 - டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
- 1933 - ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.
- 1938 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1939 - மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் ஜப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: முன்னர் நடுநிலையாக இருந்த பின்லாந்து அச்சு நாடுகளுக்கெதிராக போரை அறிவித்தது.
- 1966 - பிரித்தானிய போயிங் 707 பயணிகள் விமானம் ஒன்று ஃபியூஜி மலையில் விபத்துக்குள்ளானதில் 124 பேர் கொல்லப்பட்டனர்.
- 1969 - நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
- 1971 - இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
- 1974 - பாரிஸ் அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1974 - ரோமன் கத்தோலிக்கம் மற்றும் லூத்தரன் ஆகிய கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இரண்டும் இணைந்தன.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.
- 1992 - பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
- 2002 - சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1839 - ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)
- 1845 - கியார்கு கேன்ட்டர், கணிதவியலர் (இ. 1918)
- 1847 - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (இ. 1922)
- 1867 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (இ. 1911)
- 1950 - திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர்.
- 1955 - கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)
- 1970 - இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் துடுப்பாட்டக்காரர்
இறப்புக்கள் [தொகு]
- 1703 - ராபர்ட் ஹூக், ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1635)
- 1707 - ஔரங்கசீப், மொகாலயப் பேரரசர் (பி. 1618)
- 1996 - சி. சிவஞானசுந்தரம், சிரித்திரன் ஆசிரியர்.
- 1999 - ஜேராட் ஹேர்ஸ்பேர்க், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)