இலண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(லண்டன் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலண்டன் மாநகர்
வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை, மணிக்கூட்டுக் கோபுரம், மற்றும் இலண்டனின் தேம்ஸ் ஆற்றின் மீதுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலம்மாற்றுக்காட்சி
வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை, மணிக்கூட்டுக் கோபுரம், மற்றும் இலண்டனின் தேம்ஸ் ஆற்றின் மீதுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலம்
மாற்றுக்காட்சி
இலண்டன் மாநகர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது
இலண்டன் மாநகர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது
அமைவு: 51°30′28″N 00°07′41″W / 51.50778, -0.12806
நாடு ஐக்கிய இராச்சியம்
அரசமைப்பு இங்கிலாந்து
அமைக்கப்பட்டது கி.பி 50
அரசு
 - ஆட்சியாளர் இலண்டன் சட்டசபை
 - நகர தந்தை கென் லிவிங்ஸ்டோன்
பரப்பளவு
 - நகரம் 609 சதுர மைல் (1,577.3 கிமீ²)
ஏற்றம் 24.1 மீ (79 அடி)
மக்கள் தொகை (2006)
 - நகரம் 7,512,400
 - புறநகர் 8,278,251
 - மாநகரம் 12–14 மில்லியன்
 - மாநகர அடர்த்தி 4,761/கிமீ² (12,331/சதுர மைல்)
 - இனக்குழு 69.6% வெள்ளை
3.4% கலப்பு
12.9% தெற்காசியர்
10.8% கருப்பு
3.3% மற்றவர்
நேர வலயம் கிரீனிச் பொது நேரம் (ஒ.ச.நே.+0)
இணையத்தளம்: www.london.gov.uk


இலண்டன் (ஆங்கிலம்: London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட conurbation ஆகும். உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான லண்டனியம் ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது.

பொருளடக்கம்

[தொகு] அமைவிடம்

"லண்டன்" என்னும் சொல் பல நூறு ஆண்டுகளாகவே வரலாற்றுப் புகழ் பெற்ற மிடில்செக்ஸ், இங்கிலாந்து கவுண்டியிலிருந்த சிறிய நகரமான இலண்டனை மையமாகக் கொண்டிருந்த conurbation ஐக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. இன்று பொதுவாக இது பெரிய இலண்டன் (Greater London) என் அறியப்படுகின்ற நிர்வாகப் பிரதேசத்தையே குறித்தாலும், சிலவேளைகளில் இலண்டன் தபால் மாவட்டம், 020 என்னும் தொலைபேசிக் குறியீட்டு எண்ணால் குறிக்கப்படும் பகுதிகள், இலண்டனுக்கான முழு-வலயப் போக்குவரத்து அட்டைகள் பயன்படும் பகுதி, எம்25 மோட்டார்வாகனச் சாலைக்குள் அடங்கும் பகுதி போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுவதுண்டு.

இலண்டனின் மையத்தின் அமைவிடம், ((ட்)ரபல்கர் சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள Charing Cross எனக்கூறப்படுகின்றது) அண்ணளவாக 51°30' N, 0°8' W ஆகும்.

[தொகு] வரலாறு

தலைமைக் கட்டுரை: இலண்டனின் வரலாறு

லண்டினியம் எனூம் நகரம் கி. பி 50 ஆம் ஆண்டளவில் உரோமர்களால் தேம்ஸ் நதியின் வட கரையில் அமைக்கப்பட்டது. அவ்விடத்தில் உரோமருக்கு முந்திய பெரிய குடியிருப்புக்கள் இருந்ததற்கான ஆதாரங்களெதுவும் இல்லாவிடினும், இப் பெயர் உரோமருக்கு முன்னரே வழங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இது இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமாக ஆனதாக நம்பப்படுகின்றது. உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் கைவிடப்பட்டு, லுண்டென்விக் என்னும் சக்சன் (Saxon) நகரமொன்று மேற்குத் திசையில், ஓரிரு மைல்களுக்கு அப்பால் அல்ட்விச் (Aldwych) பகுதியில் 7 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.

[தொகு] இலண்டனின் சுற்றுலா மையங்கள்

[தொகு] வெளியிணைப்புகள் - ஆங்கிலத்தில்


உலகத்தமிழர் வாழ் நகரங்கள்|
சென்னை | மதுரை | பெங்களூர் | யாழ்ப்பாணம் |கொழும்பு | ரொறன்ரோ | சிங்கப்பூர் | கோலாலம்பூர் | லா சப்பல் - பாரிஸ் | இலண்டன்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்