கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேங்காக்
กรุงเทพมหานคร |
|
பேங்காக் |

முத்திரை |
|
|
தாய்லாந்தில் அமைவிடம் |
| அமைவு: 13°45′8″N 100°29′38″E / 13.75222, 100.49389 |
| நாடு |
தாய்லாந்து |
| தோற்றம் |
அயுத்தயா இராச்சியம் |
| தலைநகரம் |
ஏப்ரல் 21 1782 |
| அரசு |
| - வகை |
சிறப்பு நிர்வாகப் பகுதி |
| - ஆளுனர் |
அபிராக் கொசாயொத்தின் |
| பரப்பளவு |
| - நகரம் |
1,568.737 கிமீ² (605.7 ச. மைல்) |
| - மாநகரம் |
7,761.50 கிமீ² (2,996.7 sq mi) |
| மக்கள் தொகை (2007) |
| - நகரம் |
57,14,481 |
| - அடர்த்தி |
4,051/கிமீ² (10,492/ச. மைல்) |
| - மாநகரம் |
1,00,61,726 |
| - மாநகர அடர்த்தி |
1,296.36/கிமீ² (3,357.6/ச. மைல்) |
| நேர வலயம் |
தாய்லாந்து நேர வலயம் (ஒ.ச.நே.+7) |
| இணையத்தளம்: http://www.bma.go.th |
பேங்காக் தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தாய் மொழியில், குருங் கேப் மஹாந கொன் (தாய் மொழியில்: กรุงเทพมหานคร) என வழங்கப்படுகிறது. இதில் குருங் கேப் என்ற தாய் மொழிச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். பேங்காக்கின் முழுப்பெயர், குருங் கேப் மஹாந கொன் அமன் ரத்டனகொசின் மஹிந்தரயுத்தய மகாடிலோக் போப் நோப்ப்ஹராத் ராட்சதனி புரிறோம் உடோம்ரட்சநிவேட் மகாசதன் அமன் பிமன் அவதான் சதித் சக்கதட்டிய விட்சனுகம் பிரசித் (Krung Thep Mahanakhon Amon Rattanakosin Mahintharayutthaya Mahadilok Phop Noppharat Ratchathani Burirom Udomratchaniwet Mahasathan Amon Phiman Awatan Sathit Sakkathattiya Witsanukam Prasit) என்பதாகும். 167 எழுத்துக்களை கொண்ட பேங்காக்கின் பெயரே, உலகின் நகரமொன்றின் மிக நீளமான பெயராகும். தாய்லாந்தின் சனத்தொகை அடர்த்தி மிகக் கூடிய ஒரு பிரதேசமாக இது காணப்படுகிறது. இங்கு சுமார் 9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அயோத்திய ராசதானியின் போது, மேற்குக்கரையில் (west bank) காணப்படும் கீழ் கேயோ பிராய என்ற பகுதியின் வர்த்தக மையமாகவே பேங்காக் ஆரம்பத்தில் காணப்பட்டது. 1768 ஆம் ஆண்டு, டக்சின் அரசனின் மறைவைத் தொடர்ந்து, மேற்குக்கரையாகவிருந்த ரமா ஆற்றின் அமைவிற்கு தலைநகரம் மாற்றப்பட்ட போதே, பேங்காக் தலைநகரமாக உருவெடுத்தது.
இன்று, தெற்கிழக்காசியாவில், மிக முக்கியமான வர்த்தக மையமாக பேங்காக் விளங்குவதோடு, பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ள பயண நுழைவாயிலாகவும் விளங்குகின்றது. இங்கு மிகவும் உயர்ந்த செலவில் அலங்கரிப்பட்டுள்ள 400 கோயில்கள் காணப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப்பெரியளவான விற்பனை வளாகங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு ஆறு பல்கலைக்கழகங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு காணப்படும் எண்ணிலடங்கா கால்வாய்களினால், மிதக்கும் சந்தைகள் பலதையும் உருவாக்கின்ற தளமாகவிருக்கிறது. இதனால், பேங்காக், "கிழக்கின் வெனிசு" என்று வழங்கப்படுவதுமுண்டு.
|
ஆசிய நாடுகளின் தலைநகரங்கள் |
|
| மேற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா |
நடு ஆசியா |
கிழக்காசியா |
|
அபுதாபி (நகரம்), ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
அமான், ஜோர்தான்
அங்காரா, துருக்கி 8
பாக்தாத், ஈராக்
பாகு, அசர்பைஜான் 8
பெய்ரூத், லெபனான்
திமிஷ்கு, சிரியா
தோகா, கத்தார்
யெரூசலம், இசுரேல் மற்றும் பாலத்தீன அதிகார சபை கோரும் தலைநகர்;6 7 குவைத் நகரம், குவைத்
மனாமா, பக்ரைன்
மஸ்கட், ஓமான்
நிக்கோசியா, சைப்பிரஸ் 7
ரமல்லா, பாலத்தீன அதிகார சபை நிகழ்நிலை
ரியாத், சவுதி அரேபியா
சன்ஆ, யெமன்
திபிலீசி, ஜோர்ஜியா 8
தெஹ்ரான், ஈரான்
யெரெவான், ஆர்மீனியா 7
|
அஸ்காபாத், துருக்மெனிஸ்தான்
அஸ்தானா, கசக்ஸ்தான் 8
பிசுக்கெக், கிர்கிசுத்தான்
துசான்பே, தஜிகிஸ்தான்
தாஷ்கந்து, உசுபெக்கிசுத்தான்
தெற்காசியா
டாக்கா, வங்காளதேசம்
இசுலாமாபாத், பாக்கித்தான்
காபூல், ஆப்கானித்தான் 1
காட்மாண்டூ, நேபாளம்
கோட்டே, கொழும்பு, இலங்கை 3
மாலே, மாலைதீவுகள்
புது தில்லி, இந்தியா
திம்பு, பூட்டான்
|
பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
பியொங்யாங், வடகொரியா
சியோல், தென் கொரியா
தைப்பெய், சீனக் குடியரசு (ROC) 2
டோக்கியோ, ஜப்பான்
உலான் பாடர், மங்கோலியா 1
தென்கிழக்காசியா
பண்டர் செரி பெகாவான், புரூணை
பேங்காக், தாய்லாந்து
டிலி, கிழக்குத் திமோர்
ஹனோய், வியட்நாம்
ஜகார்த்தா, இந்தோனேசியா
கோலாலம்பூர் 4 மற்றும் புத்ராஜெயா,5 மலேசியா
மணிலா, பிலிப்பீன்சு
நைப்பியித்தௌ, மியான்மார் புனோம் பென், கம்போடியா
மொரெசுபி துறை, பப்புவா நியூ கினி 9
சிங்கப்பூர், சிங்கப்பூர்
வியஞ்சான், லாவோஸ்
|
|
|
| 1 Often considered part of Central Asia 2 தாய்வான் என்று பொதுவாக அழைக்கபடுகிறது 3 முழுப்பெயர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே 4 Formal 5 Administrative 6 See Positions on யெரூசலம் for details on யெரூசலம்'s status 7 Entirely in Southwest Asia but having socio-political connections with Europe 8 Transcontinental country 9 Entirely in Melanesia but having socio-political connections with Southeast Asia |
|