திருச்சிராப்பள்ளி
| திருச்சிராப்பள்ளி | |
| — மாநகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
| மாநகராட்சித் தலைவர் | எ. ஜெயா |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,52,066 (2001[update]) • 5,338 /km2 (13 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 140.90 square kilometres (54.40 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.trichycorporation.gov.in |
திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli;Trichinopoly[கு 1]), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது ; இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்; மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். இதைப் பொதுவாக திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.
பொருளடக்கம் |
பெயர்க் காரணம் [தொகு]
திருச்சிராப்பள்ளி என்ற பெயர் திரிஷிராபுரம் (திரிஷிரா-மூன்று தலை; புரம்-ஊர்) என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. [1][2] இந்து சமயப் புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்தததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்குத் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவினாலும் அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை[1].
சி. பி. பிரவுன் எனும் தெலுங்கு அறிஞர் சிறிய ஊர் எனப் பொருள் தரும் "சிறுத்த-பள்ளி" என்ற வார்த்தையிலிருந்து திருச்சிராப்பள்ளி என உருவாகியிருக்கும் என்ற கருத்தைத் தருகிறார்.[1][2] 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது.[1][2] வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.[1][2]
இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
வரலாறு [தொகு]
திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது.[3] முற்கால சோழர்களின் தலைநகராக கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர்[4] தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[5][6][7][8] கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை [9][10]உறையூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.
5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களை கட்டினான்[11][12][13][14] . பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.[15] சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களை தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினார். [16][17] மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களை கைப்பற்றினார்கள். இவர்கள் இரங்கநாதன் கோவிலை களங்கப்படுத்தினதால் அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது [18] வீதி உழாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாக திருமலையில் பாதுகாக்கப்பட்டது. [19] முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுனர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது .[20].
மக்கள் வகைப்பாடு [தொகு]
| மக்கள்தொகை வளர்ச்சி | ||
|---|---|---|
| ஆண்டு | ம.தொ. | %± |
| 1871 | 76,530 | — |
| 1881 | 84,449 | 10.3% |
| 1891 | 90,609 | 7.3% |
| 1901 | 1,04,721 | 15.6% |
| 1911 | 1,23,512 | 17.9% |
| 1921 | 1,20,422 | −2.5% |
| 1931 | 1,42,843 | 18.6% |
| 1941 | 1,59,566 | 11.7% |
| 1951 | 2,18,921 | 37.2% |
| 1961 | 2,49,862 | 14.1% |
| 1971 | 3,07,400 | 23.0% |
| 1981 | 3,62,045 | 17.8% |
| 1991 | 3,87,223 | 7.0% |
| 2001 | 7,52,066 | 94.2% |
| 2011 | 8,46,915 | 12.6% |
| Sources: | ||
இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை: 746,062 ஆகும். .[27] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருச்சி மாநகரப்பகுதியின் மக்கள்தொக 866,354 ஆகும்.[28] தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி இந்தியளவில் 47வது இடத்தில் உள்ளது.[25] 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 846,915 ஆகவும்.[26] கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,021,717 ஆகவும் உள்ளது.[29] திருச்சிராப்பள்ளியில் 162,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[30]
மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும்[31] முசுலிம்களும் வாழ்கின்றனர்.[32] குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும்[33] சமணர்களும்[34] இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாக தமிழ் விளங்கினாலும்[35] கணிசமான மக்கள் தெலுங்கு,[36] சௌராட்டிர மொழி[37] மற்றும் கன்னட மொழி[38] பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.[39] மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.[40] இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர்.[41]
புவியியலும் வானிலையும் [தொகு]
| தட்பவெப்பநிலை வரைபடம் திருச்சிராப்பள்ளி |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி |
|
14.3
30
20
|
5.4
33
21
|
9.5
35
23
|
50.5
37
26
|
65.2
37
26
|
34.9
37
27
|
60.6
36
26
|
85.5
35
26
|
146.6
35
25
|
191.5
32
24
|
131.8
30
23
|
84.4
29
21
|
| வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: இந்திய வானிலையியல் துறை[42] வரைபட எளிமைக்காக, வரைபடத்திலுள்ள பொழிவு எண்கள் 1:10 அளவில் சுருக்கப்பட்டுள்ளன. |
|||||||||||
|
Imperial conversion
|
|||||||||||
திருச்சிராப்பள்ளி என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது.[43] நகரத்தின் சராசரி உயரம் 88 மீட்டர்கள்s (289 அடி) ஆகும்.[44] இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.[45] இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாக சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது.[46][47] வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட 146.7 square kilometres (56.6 ச மைல்) பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது.[48] திருச்சியின் மேற்கே 16 kilometres (9.9 மை) தொலைவில் காவிரியின் கழிமுகம் துவங்குகிறது. [49] இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது.[50]
காவேரி ஆற்றையொட்டியப் பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிட ஆறும் செழிப்பான வண்டல் மண்ணை கொண்டு சேர்த்துள்ளன.[51] தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன.[51] வண்டல் வளமிகு நஞ்செய் நிலங்களில் ராகியும் சோளமும் பயிரிடப்படுகின்றன.[52] வட-கிழக்கில் திருச்சிராப்பள்ளி வகை என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன.[53] தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாக கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன.[46]
நகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன.[24] நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன.[24] நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன.[24] கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன.[54] ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சில்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.[55] தமிழ்நாடு நகர மற்றும் ஊரக திட்ட சட்டம் 1974க்கிணங்க ஏப்ரல் 5, 1974இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது.[56] நகரத்திற்கு காவேரி ஆற்றிலிருந்து 1470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது.[30]
ஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது. [57] மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது.[57][58] ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது.[57] பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை; அவை குளிர் மாதங்களில் ஏற்படலாம்.[57]
| தட்பவெப்ப நிலை தகவல், திருச்சிராப்பள்ளி | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 30.1 (86.2) |
32.6 (90.7) |
35.1 (95.2) |
36.9 (98.4) |
37.4 (99.3) |
36.7 (98.1) |
35.7 (96.3) |
35.4 (95.7) |
24.5 (76.1) |
32.2 (90) |
30.1 (86.2) |
29.2 (84.6) |
33.8 (92.8) |
| தாழ் சராசரி °C (°F) | 20.3 (68.5) |
20.9 (69.6) |
23.0 (73.4) |
25.8 (78.4) |
26.4 (79.5) |
26.5 (79.7) |
25.9 (78.6) |
25.5 (77.9) |
24.7 (76.5) |
23.9 (75) |
22.7 (72.9) |
21.2 (70.2) |
23.9 (75) |
| பொழிவு mm (inches) | 14.3 (0.563) |
5.4 (0.213) |
9.5 (0.374) |
50.5 (1.988) |
65.2 (2.567) |
34.9 (1.374) |
60.6 (2.386) |
85.5 (3.366) |
146.6 (5.772) |
191.5 (7.539) |
131.8 (5.189) |
84.4 (3.323) |
880.2 (34.654) |
| ஆதாரம்: IMD | |||||||||||||
நகர நிர்வாகம் [தொகு]
திருச்சிராப்பள்ளி மாநகரம் 65 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது.
பொருளாதாரம் [தொகு]
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது.[59] உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.[59] பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று.[59] திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் [60][61][62] சிறீரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன.[62][63] சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது.[64]
இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகளை உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.[65] இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும்[66] நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.[67] 1980களில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது.[68]
திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக்கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது. [69] இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.[70]
இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது.[71][72] இதனைத் தொடர்ந்து
58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து 22,927.4 square metres (2 sq ft) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.[73] மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது.[74] மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாக திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது.[75] இங்கு தெளிந்த சாராவி,[75] அசிடால்டெஹைடு,[75] அசிட்டிக் காடி,[75] அசிடிக் அன்ஹைடிரைடு[76] மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது.[77]
இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம்
26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது.[78] திசம்பர் 9, 2010இல்
60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது.[79][80] தமிழ்நாடு மின்னனுக்கழகம் வரையறையால் 59.74 hectares (147.6 acres) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது.[80][81] இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.[82]
போக்குவரத்து [தொகு]
திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து [தொகு]
தேசிய நெடுஞ்சாலைகள் தேநெ45, தேநெ 45பி, தேநெ 67, தேநெ 210, தேநெ 227, ஆகியவை இதன் வழியாக செல்கின்றன.
| தேசிய நெடுஞ்ச்சாலை எண் | தொடங்கும் இடம் | முடியும் இடம் |
|---|---|---|
| தேநெ 45 | சென்னை | தேனி |
| தேநெ 45பி | திருச்சி | தூத்துக்குடி |
| தேநெ 67 | நாகப்பட்டினம் | குண்டல்பேட் |
| தேநெ 210 | திருச்சி | இராமநாதபுரம் |
| தேநெ 227 | திருச்சி | சிதம்பரம் |
பேருந்து நிலையங்கள் [தொகு]
இங்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன.
- மத்திய பேருந்து நிலையம்: இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. முன்பு வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து புறப்படும் இடமாக இருந்தது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், வானூர்தி நிலையமும் ஒப்பிடும் போது, அருகாமையில் இருக்கிறது.
- சத்திரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது முன்பு நகரப்பேருந்து நிலையமாக இருந்தது.
பேருந்து போக்குவரத்து மாற்றம் [தொகு]
திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.
அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 5கி.மி. கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.
பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது.வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும்(lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.
தொடருந்துகள் [தொகு]
திருச்சிராப்பள்ளி தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்கு தொடருந்து வசதி உண்டு. தினசரி 16 தொடருந்துகள் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்கின்றன. பல்லவன் விரைவு வண்டி, சென்னை விரைவு வண்டி (வண்டி எண் 16854) ஆகியவை திருச்சியில் இருந்து கிளம்புகின்றன, மற்றவை திருச்சி வழியாக சென்னை செல்லுகின்றன.
தினசரி திருச்சிராப்பள்ளி வழியாக செல்லும் தொடருந்துகள் [83].
| வண்டியின் பெயர் | வண்டி எண் | புறப்படும் இடம் | சேருமிடம் |
|---|---|---|---|
| அனந்தபுரி விரைவு வண்டி | 16724 | திருவனந்தபுரம் | சென்னை |
| பொதிகை | 12662 | செங்கோட்டை | சென்னை |
| பல்லவன் | 12606 | திருச்சிராப்பள்ளி | சென்னை |
| வைகை | 12636 | மதுரை | சென்னை |
| இராமேசுவரம்-சென்னை | 16714 | இராமேசுவரம் | சென்னை |
| குருவாயூர்- சென்னை | 16128 | குருவாயூர் | சென்னை |
| சென்னை | 06804 | செங்கோட்டை | சென்னை |
| மங்களூர்-சென்னை | 06108 | மங்களூர் | சென்னை |
| மலைக்கோட்டை | 16178 | கும்பகோணம் | சென்னை |
| திருச்செந்தூர்-சென்னை | 16736 | திருச்செந்தூர் | சென்னை |
| நெல்லை | 12632 | திருநெல்வேலி | சென்னை |
| கன்னியாகுமரி | 12634 | கன்னியாகுமரி | சென்னை |
| முத்து நகர் | 12694 | தூத்துக்குடி | சென்னை |
| சென்னை | 16854 | திருச்சிராப்பள்ளி | சென்னை |
| பாண்டியன் | 12638 | மதுரை | சென்னை |
| சென்னை | 16702 | இராமேசுவரம் | சென்னை |
| மைசூர் | 16231 | மயிலாடுதுறை | மைசூர் |
மைசூர் விரைவு வண்டி பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது.
திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து மூன்றாவது பெரியதாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன.
திருத்தலங்கள் [தொகு]
- அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
- அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
- அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
- அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
- அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
- அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
- அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
- அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை
- அருள்மிகு உத்தமர் கோயில்
- அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்
- அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி
சுற்றுலாத் தலங்கள் [தொகு]
- மலைக்கோட்டை
- ஸ்ரீரங்கம்
- திருவானைக்கோவில்
- முக்கொம்பு
- கல்லணை
- வயலூர் முருகன் கோயில்
- கங்கை கொண்ட சோழபுரம்
கல்வி [தொகு]
கல்லூரிகள் [தொகு]
திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி [தொகு]
- பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- ஜமால் முகம்மது கல்லூரி
- நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி
- பிஷப் ஹீபர் கல்லூரி
- தூய வளனார் கல்லூரி (இது சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் பழமையானதாகும்)
- ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி
- உருமு தனலட்சுமி கல்லூரி
- ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி
- கலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- காவேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கிருத்துராஜ் கல்லூரி
- சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி
- செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தூய சிலுவைக் கல்லூரி
- தேசியக் கல்லூரி
- பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
- ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி
- தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி
- M.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சட்டக் கல்லூரி [தொகு]
- அரசு சட்டக் கல்லூரி,திருச்சிராப்பள்ளி.
பொறியியல் கல்லூரி [தொகு]
- அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
- தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி)
- ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி
- சாரநாதன் பொறியியல் கல்லூரி
- ஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- திருச்சி பொறியியல் கல்லூரி
- MAM பொறியியல் கல்லூரி
- K.Ramakrishnan College of Engineering ( Samayapuram )
வேளாண்மைக் கல்லூரி [தொகு]
- அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
பள்ளிகள் [தொகு]
- திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (The Higher Secondary School for Boys, Srirangam)
- பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- ஈ.ஆர். மேனிலைப் பள்ளி
- பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி
- ஈ.வே.ரா. மேனிலைப்பள்ளி
- புனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி
- புனித வளனார் மேனிலைப்பள்ளி
- தேசிய மேனிலைப்பள்ளி
- கேம்பியன் மேனிலைப்பள்ளி
- ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி
- காஜா மியான் மேனிலைப்பள்ளி
- திரு இருதய மேல்நிலைப்பள்ளி
Ponniah higher secondary school trichy
alpha wisdom matriculation higher secondry school trichy kk nagar
விக்கிக்காட்சியகம் [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ Trichinopoly என்று பிரித்தானிய வரலாற்று ஆவணங்களில்குறிப்பிடப்படுகிறது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Hemingway, p 2
- ↑ 2.0 2.1 2.2 2.3 Yule, Sir Henry; Burnell, Arthur Coke (1903). "Trichinopoly". Hobson-Jobson: A glossary of colloquial Anglo-Indian words and phrases. J. Murray. p. 938. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:368.hobson.
- ↑ Thani Nayagam, p 324
- ↑ Sastri, p 22
- ↑ Sastri, p 19
- ↑ Beck, p 40
- ↑ உறையூர் சோழர் தலைநகரம் - தி இந்து
- ↑ http://www.hindu.com/fr/2004/11/05/stories/2004110503201000.htm
- ↑ http://www.thehindu.com/life-and-style/kids/article2408778.ece
- ↑ பிரித்தானிகா கல்லணை கட்டப்பட்டது 2ம் நூற்றாண்டு
- ↑ Kuppuram, p 105
- ↑ Sastri, p 105
- ↑ Beck, p 42
- ↑ Beck, p 92
- ↑ Sastri, p 438
- ↑ Aiyangar, p 99
- ↑ Lal, pp 251-252
- ↑ http://www.templenet.com/Tamilnadu/df001.html
- ↑ http://news.oneindia.in/2006/07/16/srirangam-temple-to-honour-tirupathi-temple-with-vasthirams-1153040574.html
- ↑ Sathianathaier, p 234
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedimperialgazetteer1908v24p43 - ↑ Census Commissioner (1941). Census of India, 1941: Vol 2. Government of India.
- ↑ Rural Urban Relationship Committee, p 226
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedrajendranp3 - ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedmanorama2007p707 - ↑ 26.0 26.1 "Table 2: Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals. Government of India. பார்த்த நாள் 2011-10-19.
- ↑ "2001-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedcities_towns - ↑ "Table 3: Urban agglomerations having population 1 Lakh and above" (PDF). Provisional Population Totals. Government of India. பார்த்த நாள் 2011-10-19.
- ↑ 30.0 30.1 (PDF) Tiruchirappalli shows the way. Wateraid India. 2008. p. 4. http://www.wateraid.org/documents/plugin_documents/tiruchirappalli_shows_the_way.pdf. Retrieved 2011-05-13.
- ↑ Chockalingam, K. (1979). Census of India, 1971: Tamil Nadu. Government of India. p. 88.
- ↑ "Bakrid celebrated in Trichy with gaiety". The Hindu (India). 10 December 2008. http://www.hindu.com/2008/12/10/stories/2008121059380300.htm. Retrieved 2011-05-11.
- ↑ "Lt. Governor felicitated". The Hindu (India). 29 December 2010. http://www.hindu.com/2010/12/29/stories/2010122964040300.htm. Retrieved 2011-05-11.
- ↑ "Jain Sangh celebrates Mahaveer Jayanthi". The Hindu (India). 17 April 2011. http://www.hindu.com/2011/04/17/stories/2011041750960200.htm. Retrieved 2011-05-11.
- ↑ Sen, p 606
- ↑ Ramappa and Sudershan, p 116
- ↑ Ramesh, T. A. (15 January 2006). "The Unwritten History of the Saurashtrians of South India". boloji.com. http://www.boloji.com/history/039.htm.
- ↑ Muthanna, Preface, p iii
- ↑ Thurston, Edgar (1913). Provincial Geographies of India Vol 4: The Madras Presidency with Mysore, Coorg and Associated States. Cambridge University. p. 123.
- ↑ "Sri Lankan Tamil refugees wish for Indian citizenship". The Hindu (India). 3 November 2009. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article42734.ece. Retrieved 2011-05-11.
- ↑ Deefholts, Glenn; Acharya, Quentine (2006). The way we were: Anglo-Indian chronicles. Calcutta Tiljallah Relief Inc. p. 205. ISBN 0975463934, ISBN 978-0-9754639-3-2.
- ↑ "Climatology of Tiruchirappalli". இந்திய வானிலையியல் துறை. பார்த்த நாள் 2011-05-12.
- ↑ "Tiruchirappalli". Falling Grain genomics Inc.. பார்த்த நாள் 2011-05-12.
- ↑ "Weather data for Tiruchchirappalli, India". Canty and Associates LLC. பார்த்த நாள் 2011-05-12.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedraop193 - ↑ 46.0 46.1 Imperial Gazetteer of India, Vol 24, p 26
- ↑ Rajendran et al, p 1
- ↑ Abram, p 489
- ↑ Sharma, p 117
- ↑ Moore, p 61
- ↑ 51.0 51.1 Imperial Gazetteer of India, Vol 24, p 32
- ↑ Imperial Gazetteer of India, Vol 24, p 33
- ↑ Geological Survey of India, p 104
- ↑ Superintendent, Census Operations, p 215
- ↑ Ayyar, p 453
- ↑ "Tiruchirappalli Local Planning Authority – An organisation". Tiruchirappalli Local Planning Authority. பார்த்த நாள் 2011-10-19.
- ↑ 57.0 57.1 57.2 57.3 Annesley, pp 62-64
- ↑ Moore, p 88
- ↑ 59.0 59.1 59.2 Imperial Gazetteer of India, Vol 24, p 36
- ↑ Saqaf, Syed Muthathar (28 December 2010). "Arrival of onions from Maharashtra stabilizes price". The Hindu (India). http://www.hindu.com/2010/12/28/stories/2010122854770800.htm. Retrieved 2011-05-11.
- ↑ "Market to be shifted". The Hindu (India). 1 June 2010. http://www.hindu.com/2010/06/01/stories/2010060158570100.htm. Retrieved 2011-05-11.
- ↑ 62.0 62.1 "Trichy a land of tradition". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2011-05-12.
- ↑ Balaganessin, M. (4 May 2005). "Bitter fall in mango prices, thanks to huge arrivals". The Hindu (India). http://www.hindu.com/2005/05/04/stories/2005050415600300.htm. Retrieved 2011-05-11.
- ↑ Ganesan, S. (October 17, 2008). "Power holiday stifles output of rice mills". The Hindu (Chennai, India). http://www.hindu.com/2008/10/17/stories/2008101754900500.htm. Retrieved 2011-12-22.
- ↑ "Indian Ordnance Factories: Ordnance Factory Tiruchirapalli". Ordnance Factory Board, Defence Ministry, Government of India. பார்த்த நாள் 2011-05-12.
- ↑ "Indian Ordnance Factories: Heavy Alloy Penetrator Project". Ordnance Factory Board, Defence Ministry, Government of India. பார்த்த நாள் 2011-05-12.
- ↑ Ramakrishnan, P. (2007). Powder metallurgy: processing for automotive, electrical/electronic and engineering industry ; [International Conference on Powder Metallurgy for Automotive and Engineering Industry ... at the Renaissance Mumbai Hotel and Convention Center during Feb. 3 – 6, 2005]. New Age International. p. 50. ISBN 8122420303, ISBN 978-81-224-2030-2.
- ↑ Radhakrishnan, P. (2000). Cad/cam/cim. New Age International. p. 656. ISBN 8122412483, ISBN 978-81-224-1248-2.
- ↑ Caplan, Lionel (2003). Children of Colonialism: Anglo-Indians in a Postcolonial World. Berg Publishers. p. 126. ISBN 1859736327, ISBN 978-1-85973-632-6.
- ↑ Rajaram, P. (11 April 2008). "Golden Rock railway workshop rolls out stainless steel wagon prototype". The Hindu (India). http://www.hindu.com/2008/04/11/stories/2008041156540200.htm. Retrieved 2011-05-11.
- ↑ Srinivasan. "Bharat Heavy Electricals Limited". Case Studies In Marketing: The Indian Context 4Th Ed. PHI Learning Pvt. Ltd.. p. 71. ISBN 81-203-3543-0, ISBN 978-81-203-3543-1.
- ↑ Ahmad, Mohd Rizwan (2003). Inflation accounting practices in India's corporate sector. Atlantic Publishers & Distributors. p. 122. ISBN 81-269-0216-7, ISBN 978-81-269-0216-3.
- ↑ Maheshwari, R. C.; Chaturvedi, Pradeep (1997). Bio-energy for rural energisation: proceedings of the National Bio-Energy Convention-95 on Bio-Energy for Rural engergisation, organised by Bio-Energy Society of India, during December 4–15, 1995 at I.I.T. New Delhi. Concept Publishing Company. p. 19. ISBN 81-7022-670-8, ISBN 978-81-7022-670-3.
- ↑ Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1–2). Superintendent, Government Press. 1998. p. 539.
- ↑ 75.0 75.1 75.2 75.3 Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1–2). Superintendent, Government Press. 1998. p. 553.
- ↑ Manufacture of Narcotic Drugs, Psychotropic Substances and Their Precursors. United Nations Publications. p. 56. ISBN 92-1-048082-1, ISBN 978-92-1-048082-6.
- ↑ "Demand No. 37: Prohibition and Excise" (PDF). Home, Prohibition and Excise Department (2007–08). பார்த்த நாள் 2011-05-12.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedeconomictimes_it - ↑ "Tiruchi IT Park commissioned". The Hindu (India). 10 December 2010. http://www.hindu.com/2010/12/10/stories/2010121061490100.htm. Retrieved 2011-05-11.
- ↑ 80.0 80.1 "Tiruchi gets IT park". The Hindu (India). 10 December 2010. http://www.hindu.com/2010/12/10/stories/2010121059100100.htm. Retrieved 2011-05-11.
- ↑ "Tamil Nadu / Tiruchi News : ELCOT to build 50,000 sq.ft. of office space in Tier II cities". The Hindu (India). 19 July 2008. http://www.hindu.com/2008/07/19/stories/2008071953840500.htm. Retrieved 2011-05-11.
- ↑ "Infosys eyeing Tier-II cities for expansion". The Economic Times (India). 28 July 2009. http://articles.economictimes.indiatimes.com/2009-07-28/news/27653675_1_tier-ii-software-major-infosys-managing-director-s-gopalakrishnan. Retrieved 2011-05-11.
- ↑ கிளியர்டிரிப் தளத்தில் திருச்சி வழியாக சென்னை செல்லும் தொடருந்துகளை தேடும் பொழுது கிடைத்த முடிவுகள்
வெளி இணைப்புகள் [தொகு]
- திருச்சி நகரின் சிறப்பு
- திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
- திருச்சி மாநகராட்சியின் வலைப்பக்கம்
- திருச்சி மாவட்டம் பற்றிய அரசின் வலைப்பக்கம்
- திருச்சி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்
|
|||||
|
||||||||||||||