திருச்சிராப்பள்ளி
| திருச்சிராப்பள்ளி | |
| — மாநகரம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
| மாநகராட்சித் தலைவர் | எஸ். சுஜாதா |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,52,066 (2001[update]) • 5,338 /km2 (13 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 140.90 square kilometres (54.40 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.trichycorporation.gov.in |
திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது ; இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்; மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். இதைப் பொதுவாக திருச்சி என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] பெயர்க் காரணம்
'திரிசிரன்' என்ற பெயருடைய அரக்கன், மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை: 746,062 ஆகும். .[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] நகர நிர்வாகம்
திருச்சிராப்பள்ளி மாநகரம் 60 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது.
[தொகு] திருத்தலங்கள்
- அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
- அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
- அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
- அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
- அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
- அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
- அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
- அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை
- அருள்மிகு உத்தமர் கோயில்
- அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்
[தொகு] சுற்றுலாத் தலங்கள்
- மலைக்கோட்டை
- ஸ்ரீரங்கம்
- திருவானைக்கோவில்
- முக்கொம்பு
- கல்லணை
- வயலூர் முருகன் கோயில்
- கங்கை கொண்ட சோழபுரம்
[தொகு] கல்லூரிகள்
திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.
[தொகு] கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- ஜமால் முகம்மது கல்லூரி
- நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி
- பிஷப் ஹீபர் கல்லூரி
- தூய வளனார் கல்லூரி (இது சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் பழமையானதாகும்)
- ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி
- உருமு தனலட்சுமி கல்லூரி
- ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி
- கலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- காவேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கிருத்துராஜ் கல்லூரி
- சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி
- செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தூய சிலுவைக் கல்லூரி
- தேசியக் கல்லூரி
- பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
- ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி
- தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி
- M.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி
[தொகு] சட்டக் கல்லூரி
- அரசு சட்டக் கல்லூரி,திருச்சிராப்பள்ளி.
[தொகு] பொறியியல் கல்லூரி
- அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
- தேசிய தொழில்நுட்பக் கழகம் (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி)
- ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி
- சாரநாதன் பொறியியல் கல்லூரி
- ஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- திருச்சி பொறியியல் கல்லூரி
- MAM பொறியியல் கல்லூரி
[தொகு] வேளாண்மைக் கல்லூரி
- அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
[தொகு] பள்ளிகள்
- திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (The Higher Secondary School for Boys, Srirangam)
- பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- ஈ.ஆர். மேனிலைப் பள்ளி
- பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி
- ஈ.வே.ரா. மேனிலைப்பள்ளி
- புனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி
- புனித வளனார் மேனிலைப்பள்ளி
- தேசிய மேனிலைப்பள்ளி
- கேம்பியன் மேனிலைப்பள்ளி
- ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி
- காஜா மியான் மேனிலைப்பள்ளி
- திரு இருதய மேல்நிலைப்பள்ளி
[தொகு] விக்கிக்காட்சியகம்
[தொகு] ஆதாரங்கள்
- ↑ "2001-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
[தொகு] வெளி இணைப்புகள்
- திருச்சி நகரின் சிறப்பு
- திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
- திருச்சி மாநகராட்சியின் வலைப்பக்கம்
- திருச்சி மாவட்டம் பற்றிய அரசின் வலைப்பக்கம்
- திருச்சி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்
|
||||||||||||||