நாகர்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகர்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை தமிழ்நாடு நாகர்கோவில் நகராட்சி பற்றியது. யாழ்ப்பாணக் கிராமத்தைப் பற்றிய கட்டுரையை இங்கு பார்க்கலாம்: நாகர்கோயில் (இலங்கை)

நாகர்கோவில்
—  சிறப்பு நிலை நகராட்சி  —
நாகர்கோவில்
இருப்பிடம்: நாகர்கோவில்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°10′N 77°26′E / 8.17, 77.43அமைவு: 8°10′N 77°26′E / 8.17, 77.43
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன்
நகராட்சி தலைவர் மீனாதேவ்
சட்டமன்றத் தொகுதி நாகர்கோவில்
மக்கள் தொகை 2,08,149 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


13 மீட்டர்கள்s (43 அடி)

நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு.

பொருளடக்கம்

புவியியல் [தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8.17° N 77.43° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மதங்கள் [தொகு]

இந்து,கிறிஸ்தவம்,முஸ்லிம் மதத்தினர் உள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

மக்கள் வகைப்பாடு [தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 208,149 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவர். நாகர்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. நாகர்கோயில் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

நாகர்கோவில் பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு ஊராக திகழ்கிறது. இதன் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில்.

நாகர்கோவில் இலக்கியத் துறையில் சிறப்புற்று விளங்குகிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,சதாவதானி செய்கு தம்பி பாவலர், எஸ். வையாபுரிப்பிள்ளை, கே. என். சிவராஜபிள்ளை, வித்துவான் லட்சுமணபிள்ளை போன்ற தமிழறிஞர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள்.

நாகர்கோயிலில் நவீன எழுத்தாளர்கள் பல உருவாயினர். சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் போன்றவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள். ஜெயமோகன், ஜெ.ஆர்.வி.எட்வர்ட், லட்சுமி மணிவண்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

அ.கா.பெருமாள், குமரிமைந்தன், எம்.வேதசகாயகுமார், தெ.வே.ஜெகதீசன், மா.சுப்ரமணியம், ஜேம்ஸ் ஆர் டேனியல், இரணியல் கலைத்தோழன் போன்ற நவீன இலக்கிய ஆய்வாளர்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

சுற்றுலாத் தலங்கள் [தொகு]

நாகர்கோயில் நகரத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், குளச்சல் துறைமுகம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்தரம் அனுமார் கோவில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,முக்கடல் அணை,சொத்தவிளை கடற்கரை மற்றும் நிறைய இடங்கள் உள்ளன.

ஆதாரங்கள் [தொகு]

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. "Nagercoil". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கோவில்&oldid=1405333" இருந்து மீள்விக்கப்பட்டது