திருவண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவண்ணாமலை
—  சிறப்பு நிலை நகராட்சி  —
திருவண்ணாமலை
இருப்பிடம்: திருவண்ணாமலை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°08′N 79°04′E / 12.13, 79.07அமைவு: 12°08′N 79°04′E / 12.13, 79.07
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் பிங்கலே விஜய் மாருதி [3]
நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்
ஆணையர் ஆர். சேகர்
சட்டமன்றத் தொகுதி வார்ப்புரு:திருவண்ணாமலை
மக்கள் தொகை

அடர்த்தி

3,80,301 (2001)

27,881 /km2 (72 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

13.64 square kilometres (5.27 ச மைல்)

171 மீட்டர்கள்s (561 அடி)

இணையதளம் www.municipality.tn.gov.in/thiruvannamalai



திருவண்ணாமலை (ஆங்கிலம்:Tiruvannamalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.

திருவண்ணாமலை வழிகாட்டி.jpg


திருவண்ணாமலைத் திருத்தலம்

பொருளடக்கம்

திருவண்ணாமலை நகரம் உருவாக்கம்[தொகு]

திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்துவருகின்றனர் . இது "மதுரை" நகரி விட பழமையானது என்று சிலரால் கூற படுகிறது .

திருவண்ணாமலை நகராட்சி முத்திரை
பெரிய வீதி

திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது . 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ,1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது . 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக , 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"யாகும் தரம் உயர்த்தப்பட்டது .

தக்கான பீடபபூமி உருவாக்கம்[தொகு]

திருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும்(dead valcano ). பல நூற்றாண்டுக்கு முணர் இது வெடித்து இதன் தீ குழம்பு நீரில் தோய்ந்து உருவன்னது தான் தக்கணம் என்றும் சிலர் கூறுவார் .

கோவில்நகரம்[தொகு]

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.

திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும்.

இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[4] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.

இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.

இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12.22° N 79.07° E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தட்பவெப்ப நிலை தகவல், திருவண்ணாமலை (1951–1980)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
9.3
(48.7)
9.3
(48.7)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: India Meteorological Department,[6]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,80,301 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருவண்ணாமலை மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவண்ணாமலை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அருணாசலேஸ்வரர் மலையிலிருந்து அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத் தோற்றம்

சிறப்புகள்[தொகு]

அண்ணாமலையார் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. இறைவன் பெயர் - அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்) இறைவி பெயர் - உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்) புகழ் பெற்ற விழா - திருகார்த்திகை தீபம் விழா காலம் - கார்த்திகை மாதம்

போக்குவரத்து[தொகு]

திருவண்ணாமலை தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.


தொடருந்துப் போக்குவரத்து[தொகு]

திருவண்ணாமலையில் நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன.

  • வேங்கிக்கால் ,
  • திருவண்ணாமலை சந்திப்பு ,
  • திருவண்ணாமலை நகரம் ,
  • கிழ் நகர் ( டோவ்ன் டவுன்) .


தென்னக இரயில்வேயின் பழய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருகோவிலூர்,கடலூர்ரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை சந்திப்பில் இருந்து வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.

திருவண்ணாமலை ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும் . திருவண்ணாமலைலிருந்து

  • பெங்களூர் - எஸ்வந்த்பூர்
  • கொல்கத்தா - ஹௌரா
  • ஷீரடி சாய்பாபா ,
  • திருப்பதி ஆகிய ஊர்களுக்கும்


  • கடலூர் ,
  • பாண்டிச்சேரி ,
  • மன்னார்குடி ,
  • மாயவரம் ,
  • கும்பகோணம் ,
  • தஞ்சாவூர் ,
  • திருச்சி ,
  • திண்டுக்கல் ,
  • மதுரை ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது .

6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட

  • திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் ,
  • திருவண்ணமலை - காட்பாடி - சென்ட்ரல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன .

மேலும்

  • காட்பாடி - விழுபுரம் பணிகள் ரயில் ,
  • காட்பாடி - திருவண்ணாமலை பயணிகள் ரயில் ,
  • கடலூர் - ஆரணி ரோடு பயணிகள் ரயில் தினம்தோறும் இயக்கபடிகின்றன .

சாலைப் போக்குவரத்து[தொகு]

திருவண்ணாமலை நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், மற்றும் விழுப்புரம் போன்ற திருவண்ணாமலை நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, போன்ற முக்கிய நகரங்கள செல்ல அடிக்கடி பேருந்துகள் சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. திருவண்ணாமலை இருந்து மூன்று நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை


  • தேசிய நெடுஞ்சாலை 234 - (மங்களூர் - பாண்டிச்சேரி சாலை ) மங்களூர் - பேலூர் - ஹுளியார் - குரிபிட்டனுர் - சிக்கு பல்லாபூர் - வேங்கடகிரிகொட்டா - பேர்ணாம்பட்டு - குடியாத்தம் - வேலூர் நகரம் - - போளுர் - - திருவண்ணாமலை பேருந்து நிலையம் - திருவண்ணாமலை நகரம் - கண்டாச்சிபுரம் - வில்லியனூர் - புதுவை .


  • தேசிய நெடுஞ்சாலை 234 A (அ) எஸ்.எச்.9 சித்தூர் - கடலூர் சாலை (சித்தூர் - வேலூர் காட்பாடி - வேலூர் நகரம் - கண்ணமங்கலம் - போளூர் - கலசபாக்கம் - தி.லை ஆட்சியரகம் - திருவண்ணாமலை நகரம் - தி.லை சாரோன் - வேறையூர் - திருகோவிலூர் - மடப்பட்டு - பண்ரூட்டி - நெல்லிக்குப்பம் - செம்மண்டலம் - கடலூர் ).


  • தேசிய நெடுஞ்சாலை 66 - பெங்களூரு - ஓசூர் - கிருட்டிணகிரி - ஊத்தங்கரை - செங்கம் - தி.மலை இரமனாச்ரமம் - திருவண்ணாமலை நகரம் - தி.மலை நாவக்கரை - கீழ்பெண்ணாத்தூர் -செஞ்சி - திண்டிவனம் - பாண்டிச்சேரி.


  • தேசிய நெடுஞ்சாலை 269 - திருவண்ணாமலை - சங்கராபுரம் - கள்ளகுறிச்சி - திருச்சி .

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் .jpg நெரிசலான தி.மலை சாலை.jpg

பேருந்து சேவைகள்[தொகு]

  • திருவண்ணமலையில் இருந்து "வேலூர் " , "பெங்களூர்" மற்றும்"சென்னை" கு தினமும் 200 இக்கும் அதிகமான பேருண்டு சேவைகள் உள்ளது .
  • மேலும் சேலம் , பாண்டிச்சேரி , கடலூர் , திருச்சிராப்பள்ளி ,காஞ்சிபுரம் ,தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு அதிகபடியான சேவைகள் உள்ளன .
  • மதுரை , கோயம்புத்தூர் ,திருப்பூர் ,ஈரோடு ,கரூர் ,புதுகோட்டை , மார்த்தாண்டம் , கன்னியாகுமரி , காரைக்குடி , கும்பகோணம் ,நாகபட்டினம் ,திண்டுக்கல் ,பொள்ளாச்சி , பழனி ஆகிய ஊர்களுக்கும் 10 லிருந்து 20 சேவைகள் உள்ளன .
  • இது மட்டும் இன்றி திருப்பதி , கர்நாடக மாநிலம் சீமக்கா (Shimoga ) , சிக்கமகளூர் , உடுப்பி ,சாகர் ஆகிய ஊர்களுக்கும் கர்நாடக அரசு பேருந்துக்கள் திருவண்ணாமலைளிருண்டு இயக்கபடுகின்றன .
  • திருவண்ணாமலை தமிழ்நாட்டின் அணைத்து மாவட்ட தலைனகரத்துடனும் இணைக்கபெற்ற ஒரே நகரம் ஆகும் .

வானூர்தி நிலையம்[தொகு]

திருவண்ணாமலை யில் வானூர்தி நிலையம் ஏதும் இல்லை . எனினும் பௌர்ணமிக்கு வரும் பக்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு இன்னும் 5 வருடத்தில் வானூர்தி நிலையம் எழுப்ப உள்ளது. இதற்கான அறிவிப்பு 2009 ஆம் ஆண்டு "கலைஞர்" ஆட்சியில் வெளியிடப்பட்டு திண்டிவனம் சாலையில் இடம் தேர்வு செய்யபட்டு வருகிறது . இங்கிருந்து "பெங்களூர்" மற்றும் "சென்னை" க்கு சேவைகள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது .

தமிழ் நாடு
திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி
Tnஅரசுஊராட்சிt-logo.jpg

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி

திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி.png

ஏனைய மாவட்ட்ங்கள் · அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு
 பார்  பேச்சு  தொகு 


வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. The Hindu: திருவண்ணாமலையில் 10 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்
  5. "Tiruvannamalai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  6. "Climatological Information for arani,India". India Meteorological Department. பார்த்த நாள் 2012-12-29.
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்ணாமலை&oldid=1439968" இருந்து மீள்விக்கப்பட்டது