போடிநாயக்கனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போடிநாயக்கனூர்
—  முதல் நிலை நகராட்சி  —
போடிநாயக்கனூர்
இருப்பிடம்: போடிநாயக்கனூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10.02°′″N 77.35°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 10.02°′″N 77.35°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் வி. ஆர். பழனிராஜ்
சட்டமன்றத் தொகுதி போடிநாயக்கனூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக)

மக்கள் தொகை 73,430 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


353 metres (1 ft)

போடிநாயக்கனூர் (ஆங்கிலம்:Bodinayakkanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.02° N 77.35° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் இருக்கின்றது.

[தொகு] வரலாறு

நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் போடிநாயக்கனூர் ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த திருமலை போடிநாயக்கர் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கபடுகிறது . பாளையங்களின் ஆட்சியில் மிக பெரிய நில அமைப்புகளுடனும் , இயற்கை வளம் நிறைந்ததாகவும் , வரி தரும் பாளையமாகவும் அமைந்துள்ளது . [4]

[தொகு] காணவேண்டிய இடங்கள்:

போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள போடிமெட்டு என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் தேனிமாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடி என்றதும் உடனே ஞாபகம் வருவது போடி இல் உள்ள பரமசிவன் கோவிலும்,விடா பாறை அருவி என்ற இரு இடங்கள் தான்.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. இது தெற்கு திருவண்ணாமலை என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 7 நாள்கள் , அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாப்படுகிறது.

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். போடிநாயக்கனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடிநாயக்கனூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்த நகரம், "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும்.

இந்த நகர், ஏலக்காய், காப்பி (கொட்டை இலை வடி நீர்), தேயிலை, பருத்தி விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. குரங்கணியும், போடிமெட்டு போன்றே மலை சூழ்ந்த பகுதி ஆகும். போடிநாயக்கனூர்க்கு தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள கொட்டகுடி ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப்பட்டு, ஊருக்குள் வழங்கப்படுகிறது.

விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர்.

[தொகு] கோவில்கள்

  • விநாயகர் திருக்கோவில். (சந்தைபேட்டைப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது)
  • சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.
  • ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில்.
  • ஸ்ரீ ஐயப்பன் கோவில்.
  • பராசக்தியம்மன் திருக்கோவில்.
  • மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பரமசிவன் மலைக்கோவில்

[தொகு] கல்விக்கூடங்கள்

  • ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி
  • பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • நாடார் மேல்நிலைப்பள்ளி
  • சிசம் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. "Bodinayakkanur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. http://princelystatesofindia.com/Polegars/bodinayakkanur.html
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=போடிநாயக்கனூர்&oldid=935323" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்