வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய்த்துறைக் கோட்ட அலுவலகம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர் நியமிக்கப்படுகிறார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் பதவி உயர்வு வழியாக நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பணிகள்[தொகு]

  • வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
  • மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.
  • மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.

இதையும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வருவாய்_கோட்டம்&oldid=1381820" இருந்து மீள்விக்கப்பட்டது