கடையநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடையநல்லூர்
—  முதல் நிலை நகராட்சி  —
கடையநல்லூர்
இருப்பிடம்: கடையநல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°4′51″N 77°20′51″E / 9.08083, 77.3475அமைவு: 9°4′51″N 77°20′51″E / 9.08083, 77.3475
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்ற தலைவர் ஜைபுன்னிஷா
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

பி. செந்தூர்பாண்டியன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

75,604 (2001)

1,139 /km2 (2 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கடையநல்லூர் (ஆங்கிலம்:Kadayanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ==பெயர்க் காரணமாக அறியப்படுவது== கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால் தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரி வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனை சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகாநல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,604 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடையநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்விக்கூடங்கள்[தொகு]

 • மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி,மெயின் ரோடு.
 • தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி,மெயின் பஜார்.
 • ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி,மெயின் பஜார்.
 • அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
 • அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி,மெயின் ரோடு.
 • ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம்.
 • உலகா மேனிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம்.
 • பாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு.

முதலியன குறிப்பிடத்தக்கன.

டிச‌ம்ப‌ர் 06/12/2008 முத‌ல் க‌டையநல்லூர் ந‌க‌ராட்சி முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி தமிழ‌க‌ அர‌சு உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து

முக்கிய ஆலயங்கள்[தொகு]

 • கடைகாலீஸ்வரர் திருக்கோயில், மேலக்கடையநல்லூர்.
 • கரியமாணிக்கப்பெருமாள் கோயில்(நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்.
 • அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்.
 • முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்.
 • பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால்.
 • அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம்.
 • முத்தாரம்மன் கோயில், முத்து கிருஷ்ணாபுரம்.
 • முப்புடாதியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம்.
 • வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில், மேலக்கடையநல்லூர்.
 • தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்.
 • மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு.
 • சிந்தா மதார் தைக்கா, ரெயில்வே பீடர் ரோடு.
 • நத்தர்ஷா தைக்கா
 • திராப்ஷா தைக்கா
 • தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா

ஆதாரங்கள்[தொகு]

 1. http://www.tn.gov.in/government/keycontact/197
 2. http://www.tn.gov.in/government/keycontact/18358
 3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


வெளி இணைப்புகள்[தொகு]

கடையநல்லூரின் இணையதளம் - http://www.kadayanallur.org


"http://ta.wikipedia.org/w/index.php?title=கடையநல்லூர்&oldid=1525411" இருந்து மீள்விக்கப்பட்டது