தமிழ்நாடு அரசு
![]() மாநில முத்திரை |
|
| Seat of Government | சென்னை |
|---|---|
| செயற்குழு | |
| ஆளுநர்கள் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[1] |
| சட்ட அவை | |
| சபாநாயகர் | P. தனபால் |
| Council | இல்லை |
| தலைவர் | இல்லை |
| நீதித்துறை | |
| உயர்நீதிமன்றம் | சென்னை உயர் நீதிமன்றம் |
| தலைமை நீதிபதி | ராஜேஸ்குமார் அகர்வால் [2] |
|
இக்கட்டுரை |
|
தமிழ்நாடு அரசு
|
தமிழ் நாடு அரசு[3] 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
தற்பொழுதைய ஆட்சியாளர்
தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு கொனியேட்டி ரோசையா, தற்பொழுதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா[4], தற்போதைய தலைமை நீதிபதி ராஜேஸ்குமார் அகர்வால்
தொகுதிகள் தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக, 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
மின் ஆளுமை
தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தன் தோழமைக் கட்சியான தேமுதிகவுடன் சேர்ந்து திமுகவை வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.
பொருளடக்கம் |
அமைச்சர்கள்[5] [தொகு]
மூலம்: தமிழ்நாடு அரசு அமைச்சரவை
_
|
துறை
|
அமைச்சர் | கவனிக்கும் துறைகள் | பதவி காலம் |
|---|---|---|---|
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா | பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை மற்றும் உள்துறை | மே 2011 முதல் |
| நிதி | ஓ. பன்னீர்செல்வம் | நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் | மே 2011 முதல் |
| மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை | நத்தம் ஆர். விசுவநாதன் | மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) | |
| நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி | கே. பி. முனுசாமி | நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்ப்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறை, ஊழல் தடுப்பு, சீரமைப்பு | மே 2011 |
| வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதி | ஆர். வைத்திலிங்கம் | வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதி கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் | மே 2011 |
| உயர்கல்வி | பி. பழனியப்பன் | தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் | |
| வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் | சி. வே. சண்முகம் | வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு | |
| வேளாண்மை | செ. தாமோதரன் | வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு | நவம்பர் 2011 முதல் |
| கூட்டுறவு | செல்லூர் கே. ராஜூ | கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் | |
| வனம் | கே. டி. பச்சமால் | வனம் | மே 2011 - |
| நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் | எடப்பாடி கே. பழனிச்சாமி | நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் | மே 2011 - |
| உணவு | ஆர். காமராஜ் | உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு | |
| பால்வளம் | வி. மூர்த்தி | பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி | |
| ஊரகத் தொழில் மற்றும் சத்துணவு | எம். சி. சம்பத் | ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், சத்துணவு | |
| பொதுப் பணி | கே. வி. இராமலிங்கம் | பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டம் செயற் திட்டப்பணிகள் | மே 2011 |
| தகவல் தொழில்நுட்பம் | முக்கூர் என். சுப்பிரமணியன் | தகவல் தொழில்நுட்பம் | சனவரி 2012 முதல் |
| கால்நடை பராமரிப்பு | டி. கே. எம். சின்னையா | கால்நடை பராமரிப்பு | |
| தொழில் | பி. தங்கமணி | தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் | |
| கைத்தறி மற்றும் துணிநூல் | மரு. எஸ். சுந்தர்ராஜ் | கைத்தறி மற்றும் துணிநூல் | நவம்பர் 2011 - |
| சுற்றுலா | பூ. செந்தூர் பாண்டியன் | சுற்றுலா | ஜூன் 2011- (பிப்ரவரி 27 2013லிருந்து சுற்றுலா இவர் கவனித்துவந்த துறை பூனாட்சிக்கு ஒதுக்கப்பட்டது) |
| சமூகநலம் | பா. வளர்மதி | மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமுக சீர்திருத்தம் | |
| கைத்தறி, ஜவுளி சுற்றுச்சூழல் |
பி. வி. ரமணா | சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு | மே 2011 - |
| ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் | என். சுப்பிரமணியன் | ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் | |
| போக்குவரத்து | வி. செந்தில் பாலாஜி | போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம் | மே 2011 முதல் |
| மீன்வளம் | கே. ஏ. ஜெயபால் | மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் | |
| செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம் | கே. டி. ராஜேந்திர பாலாஜி | சிறப்புப் பணிகள் செயலாக்கம், செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் | |
| தொழிலாளர் நலம் | எஸ். டி. செல்ல பாண்டியன் | தொழிலாளர்கள், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு | |
| பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் | ஏ. முகம்மது ஜான் | பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலம், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள், வக்ஃபு உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன் | |
| இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் | எம். எஸ். எம். ஆனந்தன் | இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு | |
| வருவாய் | தோப்பு வெங்கடாச்சலம் | வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்ட உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு | சூலை 19, 2012 முதல் |
| பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் | வைகைச் செல்வன் | பள்ளி கல்வி, தொல்லியல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், தமிழ் மொழி, தமிழ் பண்பாடு | பிப்ரவரி 27, 2013 முதல் |
| காதி மற்றும் கிராம தொழில் | டி. பி. பூனாட்சி | காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம் | பிப்ரவரி 27, 2013 முதல் |
| மக்கள் நல்வாழ்வு | கே. சி. வீரமணி | குடும்ப நலன், மருத்துவ கல்வி, மக்கள் நல்வாழ்வு | பிப்ரவரி 27, 2013 முதல் |
முன்பு [தொகு]
| இலாகா | அமைச்சர் | துறைகள் | பதவி காலம் |
|---|---|---|---|
| வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் வருவாய் |
கே. ஏ. செங்கோட்டையன் | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே - நவம்பர் 2011 நவம்பர் 2011 -- சனவரி 2012 ஜனவரி 26 -- சூலை 18, 2012 |
| சட்டம் | இசக்கி சுப்பையா | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே -- சூன் 2011 |
| சட்டம் | செந்தமிழன் | செய்தி, சட்டம், நீதித்துறை, சிறைத்துறை. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | சூன் - நவம்பர் 2011 |
| தகவல் தொழில்நுட்பம் | ஆர். பி. உதயகுமார் | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே - நவம்பர் 2011 |
| அறநிலை | பரஞ்சோதி (நபர்) | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | நவம்பர் 2011 -? |
| உணவு வணிக வரிகள் மற்றும் பத்திரப்பதிவு |
அக்ரி கிருஷ்ணமூர்த்தி | உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை விலை கட்டுப்பாடு, வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். |
மே - ஜூன் 2011 ஜூன் 2011- |
| உணவு | புத்தி சந்திரன் | உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, விலை கட்டுப்பாடு. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். |
ஜூன 2011- |
| விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலம் |
என். ஆர். சிவபதி | பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலம், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு | மே - நவம்பர் 2011 - பிப்ரவரி 27 2013 |
| வணிக வரிகள் மற்றும் பத்திரப்பதிவு, சுற்றுலா | எஸ். கோகுல இந்திரா | வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
மே-ஜூன் 2011, ஜூன் 2011- பிப்ரவரி 27 2013 |
| மக்கள் நல்வாழ்வு | மரு. வி. எஸ். விஜய் | மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் | ---பிப்ரவரி 27, 2013 |
உசாத்துணை [தொகு]
- மூன்றாவது அமைச்சரவை மாற்றம்
- மூன்றாவது அமைச்சரவை மாற்றம்-விடுதலை
- மே 2011 அமைச்சரானவர்கள்
- இரண்டாவது அமைச்சரவை மாற்றம்
- நவம்பர் 11, 2011 மாற்றம்
- டிசம்பர்09, 2011 மாற்றம்
- ஜனவரி 27, 2012
- ஜனவரி 27, 2012 தினமணி
- ஜனவரி 26, 2012
- ஐபின்லைவ் பிப்ரவரி 27, 2013 3 அமைச்சர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு
- சென்னை ஆன்லைன் பிப்ரவரி 27, 2013 3 அமைச்சர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
அதிகாரப்பூர்வ இணைய தளம் [தொகு]
|
|||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||
|
||||||||||
