கோவில்பட்டி

ஆள்கூறுகள்: 9°10′22″N 77°52′17″E / 9.172700°N 77.871500°E / 9.172700; 77.871500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவில்பட்டி
—  சிறப்பு நிலை நகராட்சி  —
கோவில்பட்டி
இருப்பிடம்: கோவில்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°10′22″N 77°52′17″E / 9.172700°N 77.871500°E / 9.172700; 77.871500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் கோவில்பட்டி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
நகர்மன்ற தலைவர்
சட்டமன்றத் தொகுதி கோவில்பட்டி
சட்டமன்ற உறுப்பினர்

கடம்பூர் ராஜு (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

95,057 (2011)

1,940/km2 (5,025/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

49 சதுர கிலோமீட்டர்கள் (19 sq mi)

130 மீட்டர்கள் (430 அடி)

குறியீடுகள்


கோவில்பட்டி (ஆங்கிலம்:Kovilpatti), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது கோவில்பட்டி வட்டம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 95,097 ஆகும்; இதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°10′N 77°52′E / 9.17°N 77.87°E / 9.17; 77.87 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்நகரம் திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ. வடக்கிலும், தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ. வடகிழக்கிலும், மதுரையிலிருந்து 96 கி.மீ. தெற்கிலும் அமைந்துள்ளது. ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண். 44ல் இந்நகரம் உள்ளது. இந்நகரம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதிகபட்ச வெப்பநிலையாக 37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22°C ஆகவும் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்கள்; ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிரான மாதங்கள் ஆகும்‌. வடகிழக்குப் பருவமழை காலங்களில்தான் இந்நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறும். மாவட்ட சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்நகரின் சராசரி மழையளவு 846 மி.மீ. ஆக உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25,099 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 95,057 ஆகும். அதில் 46,033ஆண்களும், 49,024 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.07 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,065 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8,325 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,002 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில், இந்துக்கள் 92.29%, இசுலாமியர்கள் 2.48%, கிறித்தவர்கள் 5.12%மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[5]இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன.

தொழில்[தொகு]

  • இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.
  • இங்கு தீப்பெட்டி அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
  • இங்கு சில பட்டாசுத் தொழிற்சாலைகளும் உள்ளன.
  • இங்கு கடலை மிட்டாய் (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

பள்ளிகள்[தொகு]

தொடக்கப் பள்ளிகள்[தொகு]

  • கிராண்ட் கிட்ஸ் பி‌லேஸ்கூல்
  • ஆயிர வைசியர் தொடக்கப்பள்ளி
  • லாயல் மில் தொடக்கப்பள்ளி
  • லட்சுமி ஆலை (கிழக்கு) தொடக்கப்பள்ளி
  • லட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி
  • விஸ்வகர்மா தொடக்கப்பள்ளி
  • பூவலிங்கம் செட்டியார் தொடக்கப்பள்ளி
  • நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்
  • நகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின் காலனி
  • நகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதி நகர்
  • நகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களா தெரு
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி

நடுநிலைப் பள்ளிகள்[தொகு]

  • இல்லத்தார் நடுநிலைப்பள்ளி
  • நாடார் நடுநிலைப்பள்ளி
  • வணிக வைசிய நடுநிலைப்பள்ளி
  • நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ரோடு.

உயர்நிலைப்பள்ளிகள்[தொகு]

  • நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்
  • பார்வதி உயர்நிலைப்பள்ளி, இலுப்பையூரணி
  • அரசு உயர்நிலைப்பள்ளி,
  • விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி
  • ஆர். சி. உயர்நிலைப்பள்ளி
  • ஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி

மேல்நிலைப் பள்ளி[தொகு]

  • யுபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி
  • எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி
  • கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • நாடார் மேல்நிலைப்பள்ளி
  • லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி
  • வ. உ. சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள்[தொகு]

  • யுபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • காமராசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • கே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • தூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • புனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • கண்ணா மெட்ரிக் பள்ளி
  • லட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி
  • பிருந்தவன் மெட்ரிக் பள்ளி

கல்லூரிகள்[தொகு]

கோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்க்காணும் கல்லூரிகள் உள்ளன:

கலை அறிவியல் கல்லூரி[தொகு]

  • எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரி
  • கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • கோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலைக் கல்லூரி (அரசு )
  • கோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலைக் கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[தொகு]

  • நேசனல் பொறியியல் கல்லூரி
  • உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி

பல்தொழில் நுட்பக் கல்லூரி[தொகு]

  • லட்சுமி அம்மாள் பல்தொழில் நுட்பக் கல்லூரி

கோயில்கள்[தொகு]

  • மூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டி.
  • ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.
  • அகத்தியர் வழிபட்ட, அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில்(சித்திரை திருவிழா,தேர் திருவிழா).
  • ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்
  • ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்
  • அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா சிறப்பு).
  • அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா) - வேலாயுதபுரம்.
  • காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் (மற்றும் ராமர் பாதம் இருக்கிறது).
  • சொர்ண மலை கதிரேசன் கோயில்.
  • சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன்  கோவில்
  • ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்
  • அருள்மிகு ஶ்ரீ மங்கள விநாயகர் கோவில்

இராமாயணத் தொடர்புகள்[தொகு]

  • இலங்கைக்கு, சீதையை மீட்க இராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாகச் சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள சிற்றூர்கள் பெயர் பெற்றன.[சான்று தேவை]

கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் உதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.

திரையரங்குகள்[தொகு]

  • சண்முகா திரையரங்கம்
  • லட்சுமி திரையரங்கம்
  • சத்யபாமா திரையரங்கம்

சிறப்புக்கள்[தொகு]

  • சி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டயபுரம் இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
  • இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், சுவைக்குச் சிறப்புப் பெற்றது.
  • வ. உ. சிதம்பரனார் வழக்குரைஞராகத் தொழில் புரிந்த ஊர் இது.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், கயத்தாறு இங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Kovilpatti". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  5. மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவில்பட்டி&oldid=3855451" இலிருந்து மீள்விக்கப்பட்டது