தென்காசி
| தென்காசி | |
| — முதல் நிலை நகராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | சமயமூர்த்தி [3] |
| நகராட்சி தலைவர் | எஸ்.பானு |
| சட்டமன்றத் தொகுதி | தென்காசி |
| சட்டமன்ற உறுப்பினர் |
சரத்குமார் (சமக) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
62,828 (2001[update]) • 50.27 /km2 (130 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
1,250 square kilometres (480 ச மைல்) • 143 மீட்டர்கள்s (469 அடி) |
|
குறியீடுகள்
|
|
தென்காசி (Tenkasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
தென்காசி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
பொருளடக்கம் |
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,828 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தென்காசி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்காசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தல வரலாறு[தொகு]
முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர்.வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர்.அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டுள்ளார்.அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[6] முற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர். தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
இலக்கியம்[தொகு]
- திரிகூட ராசப்பகவிராயர்
- குற்றால குறவஞ்சி
- தென்காசி தல புராணம்
கல்வி நிறுவனங்கள்[தொகு]
கல்லூரிகள்
- ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி
- சட்டநாத கரையாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி
- ஜே.பி.பொறியியல் கல்லூரி
- ஜே.பி. கலை அறிவியல் கல்லூரி
பள்ளிகள்
- ஏ.ஜி. மெட்ரிக்குலேசன் பள்ளி
- ஸ்ரீ பராசக்தி வித்தியாலயா
- இ.சி.இ. ஆண்கள் அரசு பள்ளி
- மஞ்சம்மாள் அரசு மகளிர் பள்ளி
- ஹில்டண் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
- பாரத் மெட்ரிகுலேசன் பள்ளி, இலஞ்சி
- இராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி
- இந்து மேல்நிலைப் பள்ளி
- நேரு மேல்நிலைப் பள்ளி
- வீரமாமுனிவர் ஆர்.சி உயர்நிலைப் பள்ளி
- எம்.கே.வி. கந்தசாமி நாடார் மேல்நிலைப்பள்ளி
- அரசு மேல் நிலை பள்ளி, புல்லுக்காட்டு வலசை
அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்[தொகு]
- உலக அம்மன் கோவில்
- குற்றாலம்
கோயில்கள்[தொகு]
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- உலக அம்மன் கோயில்
- குலசேகரநாதர் கோயில்
- மேல முத்தார அம்மன் கோயில்
- பெருமாள் கோயில்
பள்ளிவாசல்கள்[தொகு]
- மஜ்ஜிதுத் தவ்ஹீத் (JAQH-ஜம்மியத்து அஹ்லில் குரான் வல் ஹதீஸ்)
இந்த ஜமாத்தின் மூலம் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளும், வட்டி ஒழிப்பு, வரதட்சணை எதிர்ப்பு, கல்வி விளக்கம் மற்றும் விழிப்புணர்வு, ரத்ததான முகாம், மருத்துவ முகாம், மேலும் பல, நல்ல விசயங்களை செய்து வருகிறது.
- மஸ்ஜித் ரஹ்மான்
உட்பட மொத்தம் 18 பள்ளி வாசல்கள் உள்ளன.
வணிகம்[தொகு]
தென்காசியில் வணிகம் மிகவும் முன்னேற்றம் அடைந்து காணபடுகிறது. ஐந்து ஆண்டுகளில் மிக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.எனினும் எந்த தொழிற்சாலையா பெரிய உற்பத்தி நிலையமோ இல்லாது இருப்பது பற்றி தெரியவில்லை. ஹாஜி முஸ்தபா, பாம்பே ஸ்டோர், ஷோபா ரெடிமேட்ஸ் போன்றவை பாரம்பரியம் மிக்க துணியகங்கள். வால்கர் சூ மார்ட் என்ற காலணியகம் திருநெல்வேலி மாவட்டத்திலேயே பெரிய கடை. தற்போது வந்துள்ள புஹாரி பரோட்டா ஸ்டால், அல் மாசி, க்ரீன்ஸ் லேன்ட்,மோங்கி போன்ற நவீன உணவகங்களால் சிறப்படைந்துள்ளது. நகை கடைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை வணிகமும் செவ்வனே நடை பெறுகின்றன..
புகழ்பெற்ற சிலர்[தொகு]
- தென்காசி பாண்டியர்கள்
- தியாகி சட்டநாத கரையாளர் (Ex.MLA)
- ரசிகமணி டி.கே.சி.
- திரிகூட ராசப்பகவிராயர்
- சு. மச்சேந்திரநாதன் (இ.ஆ.ப.)
பகுதிகள்[தொகு]
- அரசு குடியிருப்பு வாரியம் பகுதி
- மேலகரம்
- வாய்கால் பாலம் பகுதி
- பழைய பேருந்து நிலையம்
- புதிய பேருந்து நிலையம்
போக்குவரத்து[தொகு]
சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு புகைவண்டி தினமும் உண்டு.
இங்கிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, இராஜபாளையம், மதுரை, விருதுநகர், திருப்பூர், சென்னை, கோயமுத்தூர், என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு திருப்பதி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையங்கள் - மதுரை (சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்), திருவனந்தபுரம் (சிற்றுந்தில் 5 மணி நேரம்).
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Tenkasi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ தென்காசி தல புராணம்
|
|||||||||||||||||||||||