பொள்ளாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொள்ளாச்சி
—  சிறப்பு நிலை நகராட்சி  —
பொள்ளாச்சி
இருப்பிடம்: பொள்ளாச்சி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10.67°′″N 77.02°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 10.67°′″N 77.02°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் M. கருணாகரன் [3]
நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார்
ஆணையர் வரதராஜ்
சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி
சட்டமன்ற உறுப்பினர்

முத்துக்கருப்பண்ணசாமி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

88,303 (2001)

6,366 /km2 (16 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

13.87 square kilometres (5.36 ச மைல்)

293 metres (961 ft)

இணையதளம் www.municipality.tn.gov.in/Pollachi/


பொள்ளாச்சி (Pollachi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.67° N 77.02° E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது. பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,293 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பொள்ளாச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொள்ளாச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] சிறப்புகள்

பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருட்களுக்கு சிறப்பு பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்த சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்த சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது.

பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் தெளிவு இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது.

தென்னை மரங்கள் இங்கு அதிகமாக காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய் பொருட்களுக்கு பெயர் பெற்று காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொள்ளாச்சி&oldid=911122" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்