மடத்துக்குளம்
| மடத்துக்குளம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | கோவிந்தராஜ் [3] |
| சட்டமன்றத் தொகுதி | மடத்துக்குளம் |
| சட்டமன்ற உறுப்பினர் |
சி. சண்முகவேலு (அதிமுக) |
| மக்கள் தொகை | 20,212 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மடத்துக்குளம் (ஆங்கிலம்:Madathukulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,212 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மடத்துக்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மடத்துக்குளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மடத்துக்குளம் 01.01.2010 முதல் புதிய வருவாய் வட்டமாக பிரிக்கப்பட்டது இங்கு முக்கியமான தொழிலாக விவசாயம் உள்ளது. இது அமராவதி ஆறு மூலம் பாசனம் நடைபெறும் பகுதி ஆகும். இந்த அமராவதி ஆறு அமராவதி அணைக்கட்டிலிருந்து உருவாகி மடத்துக்குளம் சோழமாதேவி கணியூர் மற்றும் கடத்துர்வழியாக செல்கிறது.மேலும் இப்பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளன. கடத்தூரில் உள்ள அர்ச்சுனேஸ்வரர் திருக்கோவில் அமராவதி ஆற்றங்கரையில் எழில் மிகு வண்ணத்தில் அமைந்துள்ளது. இதே ஆற்றுப்பகுதியில் கணியூரில் ஒரு கோவில் உள்ளது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
|
||||||||||||||||||||||||||||