ஏக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.ஒரு ஏர்ஸ் 2.47 சென்ட் ஆகும்.மேலும் 435.6 சதுர அடி ஒரு சென்ட் அல்லது 40.47 சதுரமீட்டர் ஒரு சென்ட் ,ஒரு ஏக்கர் 100 செண்ட் (அ) 4047 ச.மீ (அ) 43560 ச.அடி ஆகும்.ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கருக்கு சமம்.

ஐ.இ வரையறை[தொகு]

ஏக்கர் குறித்த ஐக்கிய இராச்சிய வரையறை அளவீடு அலகுகள் கட்டுப்பாடுகள் 1995 சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ² ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள அடிக்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும்.

ஐ.அ வரையறை[தொகு]

ஏக்கர் குறித்த ஐக்கிய அமெரிக்க வரையறை இங்கு பரணிடப்பட்டது 2004-12-04 at the வந்தவழி இயந்திரம் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43,560 சதுர அடிகளுக்கு சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா அடிக்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (அனைத்துலக அடி மற்றும் மதிப்பீடு அடி) ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன:

  • அனைத்துலக ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது அனைத்துலக அடியான 0.3048 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
  • ஐ.அ மதிப்பீடு ஏக்கர் என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ மதிப்பீடு அடியான 1200/3937 மீட்டரை அடிப்படையாக கொண்டது.

தொடர்புடைய நீள அளவுகள்[தொகு]

ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,

அலகு மாற்றம்[தொகு]

ஒரு அனைத்துலக ஏக்கர் என்பது பின்வருவனவற்றுக்கு துல்லியமாக சமமாகும்:

ஒரு சதுர மைல் 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழான இதுவே வழமையான நிலப்பரப்பு.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்கர்&oldid=3355031" இலிருந்து மீள்விக்கப்பட்டது