ஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏர்
ஏர் உழவு
சோழவந்தான் அருகே நெல்வயலில் மாடுபூட்டி ஏர் உழவு செய்யும் காட்சி
Wikipedia:Media help

மரபு முறையில் ஏர் உழும் இரு பிரிட்டிஷ் ஷைர் குதிரைகள்

ஏர் அல்லது கலப்பை (Plough) என்பது நிலத்தைக் கிளறிப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவியாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எரி எண்ணெய் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.

மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் சுமார் ஒரு அடி ஆழம் வரை உழ முடியும்.

முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் காளைகளாலும் சில நாடுகளில் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்பட்டன. தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்&oldid=1609990" இருந்து மீள்விக்கப்பட்டது