அந்தியூர்
| அந்தியூர் | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | R. அனந்தகுமார் [3] |
| சட்டமன்றத் தொகுதி | அந்தியூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். எஸ். ரமணீதரன் (அதிமுக) |
| மக்கள் தொகை | 19,697 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
அந்தியூர் (ஆங்கிலம்:Anthiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அந்தியூரின் வெற்றிலை மிகவும் பெயர் பெற்றதாகும்.
வேளாண்மையே இவ்வூரின் முதன்மையான தொழிலாகும்.
பொருளடக்கம் |
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,697 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அந்தியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அந்தியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] ஆன்மீகத் தலங்கள்
இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும்.
[தொகு] நீர்வளம்
இவ்வூரில் வரட்டுப்பள்ளம் என்ற அணை உள்ளது. மேலும் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி ஆகிய ஏரிகளும் உள்ளன.
[தொகு] படத்தொகுப்பு
[தொகு] ஆதாரங்கள்
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
|
||||||||||||||||||||