தென்னை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Coconut Palm | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Coconut Palm (Cocos nucifera)
|
||||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||||
|
||||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||||
| Cocos nucifera (லின்னேயஸ்) |
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
பொருளடக்கம் |
வளர் இயல்பு [தொகு]
மணற்பாங்கான நிலத்தில் வளர வல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
தென்னை வளர்ப்பு [தொகு]
தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். பிலிப்பைன்சு நாடு தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.
தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள் [தொகு]
- தேங்காயிலிருந்து கிடைக்கும் புரத அமைப்பு, மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.
- இளநீர்
- தேங்காய்
- தேங்காய் எண்ணெய்
- கள்
- சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.)
- கிடுகு
- மரம்
- விறகு
- பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
- விசிறி
படங்களின் தொகுப்பு [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ William J. Hahn (1997), Arecanae: The palms, tolweb.org