சத்தியமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சத்தியமங்கலம்
—  முதல் நிலை நகராட்சி்  —
சத்தியமங்கலம்
இருப்பிடம்: சத்தியமங்கலம்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 11°30′05″N 77°14′26″E / 11.501388°N 77.2405°E / 11.501388; 77.2405ஆள்கூறுகள்: 11°30′05″N 77°14′26″E / 11.501388°N 77.2405°E / 11.501388; 77.2405
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
நகராட்சித் தலைவர் ஒ.சுப்ரமணியன்
மக்கள் தொகை

அடர்த்தி

33,748 (2001)

1,154 /km2 (2,989 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 29.24 சதுர கிலோமீற்றர்கள் (11.29 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/Sathyamangalam/


சத்தியமங்கலம் (ஆங்கிலம்:Sathyamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33,738 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சத்தியமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சத்தியமங்கலம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

பவானிசாகர் அணை[தொகு]

அனையின் கொள்லளவு 120 அடி, அனைக்கு கல்லாறு மற்றும் மாயாறு என்று 2ஆறுகள் ஆதாரமாக உள்ளது, அனையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு பின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது,

கொடிவேரி அணை[தொகு]

பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அடுத்த நிலை கொடிவேரி தான். ஈரோடு மாவட்டம் முழுவதுமே கீழ் பவானி பாசனத் திட்டம் (Lower Bhavani Project-LBP) மூலமாக விவசாயம் செய்யப் படுவதால் அங்கங்கே சின்னச் சின்ன அணைகள் கட்டப்பட்டு பராமரிக்கப் படுகிறது. கொடிவேரிக்கு அடுத்தது அணைத்தோப்பு என்ற குட்டி அணை (பவானி ஆறு காவிரியுடன் சங்கமமாகும் கூடுதுறையில் இருக்கிறது - அழகான சங்கமேச்வரர் ஆலயத்துடன்).

பெரிய கொடிவேரி[தொகு]

பண்ணாரியம்மன் கோவில்[தொகு]

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகம்[தொகு]

தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு , 1.12.2013 முதல் நடைமுறைக்கு வந்தது .சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும், கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  2. "புலிகள் காப்பகம் ஆனது சத்தியமங்கலம்". தீக்கதிர். 2 திசம்பர் 2013. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 திசம்பர் 2013. "http://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியமங்கலம்&oldid=1563073" இருந்து மீள்விக்கப்பட்டது