பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி)
பொள்ளாச்சி கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- பொள்ளாச்சி வட்டம் (பகுதி)
அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், பெரியகளத்தை, காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், முல்லிப்பட்டி,கணியாலம்பாளையம் தேவணாம்பாளையம், கம்பளாங்கரை, சிறுகளத்தை, சந்திராபுரம், சென்ன நெகமம், வகுதம்பாளையம், கக்கடவு, சோழனூர், சந்தைகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், பூசநாய்க்கெத்தளி, தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குடும்பபாளையம், குளக்கல்பாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மானூர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள்,
- பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி).
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | நா. மகாலிங்கம் | காங்கிரசு | 35148 | 23.09 | பி. கே. திருமூர்த்தி | காங்கிரசு | 27151 | 17.84 |
| 1957 | நா. மகாலிங்கம் | காங்கிரசு | 520763 | 25.63 | கே. பொன்னையா | காங்கிரசு | 49309 | 24.26 |
| 1962 | நா. மகாலிங்கம் | காங்கிரசு | 38929 | 56.18 | இரங்கசாமி | திமுக | 28780 | 41.53 |
| 1967 | எ. பி. எஸ். கவுண்டர் | திமுக | 37480 | 58.65 | ஈ. கவுண்டர் | காங்கிரசு | 25688 | 40.20 |
| 1971 | எ. பி. சண்முகசுந்தர கவுண்டர் | திமுக | 41654 | 63.53 | எ. ஈசுவரசாமி கவுண்டர் | சுயேச்சை | 23396 | 35.68 |
| 1977 | ஓ . பி. சண்முகசுந்தரம் | அதிமுக | 34896 | 45.11 | எஸ். இராசு | திமுக | 17952 | 23.20 |
| 1980 | எம். வி. இரத்தினம் | அதிமுக | 52833 | 56.61 | மு. கண்ணப்பன் | திமுக | 39797 | 42.64 |
| 1984 | எம். வி. இரத்தினம் | அதிமுக | 54337 | 52.60 | எஸ். இராசு | திமுக | 47527 | 46.01 |
| 1989 | வி. பி. சந்திரசேகர் | அதிமுக (ஜெ) | 41749 | 37.25 | பி. டி. பாலு | திமுக | 37975 | 33.89 |
| 1991 | வி. பி. சந்திரசேகர் | அதிமுக | 72736 | 63.32 | அண்டு என்கிற நாச்சிமுத்து | திமுக | 40195 | 34.99 |
| 1996 | எசு. இராசு | திமுக | 58709 | 49.20 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 36895 | 30.92 |
| 2001 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 64648 | 52.48 | தமிழ் மணி | திமுக | 32244 | 26.18 |
| 2006 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 62455 | --- | டி. சாந்தி தேவி | திமுக | 59509 | --- |
- 1951 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & பி. கே. திருமூர்த்தி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1957 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & கே. பொன்னையா இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1977ல் காங்கிரசின் எம். கே. பழனிசாமி 12537 (16.21%) & ஜனதாவின் ஆர். நடராசன் 10677 (13.80%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் என். பத்மாவதி 24605 (21.96%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் மீனாட்சி சுந்தரம் 7543 வாக்குகள் பெற்றார்.