திருச்சூர்

ஆள்கூறுகள்: 10°31′39″N 76°12′52″E / 10.5276°N 76.2144°E / 10.5276; 76.2144
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சூர்

திருச்சூர்
திருச்சிவப்பேரூர்

கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகர்
—  மாநகராட்சி  —
திருச்சூர்
திருச்சூர்
திருச்சூர்
இருப்பிடம்: திருச்சூர்

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 10°31′39″N 76°12′52″E / 10.5276°N 76.2144°E / 10.5276; 76.2144
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் திருச்சூர் மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி திருச்சூர்
மக்கள் தொகை

அடர்த்தி

317,474 (2001)

3,100/km2 (8,029/sq mi)

கல்வியறிவு 86.5% 
மொழிகள் மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

101.43 சதுர கிலோமீட்டர்கள் (39.16 sq mi)

39.58 மீட்டர்கள் (129.9 அடி)

தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Am/Aw (Köppen)

     35 °C (95 °F)
     20 °C (68 °F)

தொலைவு(கள்)
குறியீடுகள்
இணையதளம் www.corporationofthrissur.org


திருச்சூர் (Thrissur, மலையாளம்: തൃശൂര്‍, முன்னர் திரிசூர்) என்பது கேரளத்தின் திருசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். கேரளத்தின் கொல்லத்துக்கு அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரம். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இங்கு நடைபெறும் திருசூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

பெயர்க்காரணம்[தொகு]

பல பிரபலமான கோயில்கள் இந்ந்கரத்தில் உள்ளன. இங்குள்ள முதன்மையான திருத்தலம் 'வடக்குநாதன் கோவில்' என்றழைக்கப்படும் சிவபெருமானின் திருக்கோவிலாகும். இந்நகரின் மையத்தில் 65 ஏக்கர் பரப்புள்ள தேக்கின்காடு என்ற குன்று உள்ளது. அதன் நடுவே கேரளத்தின் புகழ்பெற்ற மாபெரும் ஆலயமான திருசிவப்பேரூர் சிவன் கோயில் உள்ளது, 'திருச்சிவப்பேரூர்' என்பதே மருவி திருச்சூர் என ஆயிற்று எனக் கருதப்படுகின்றது. அண்மைக்காலத்தில் திருச்சூர் சமக்கிருதவாதிகளால் த்ரிஸ்ஸூர் என அழைக்கப்படுகிறது. கேரள அரசும் அனைத்துப் பதிவுகளிலும் திருச்சூர் என்பதைத் த்ரிஸ்ஸூர் (Thrissur) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.

பண்பாட்டுத் தலைநகரம்[தொகு]

இது கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கே கேரளத்தின் முக்கியமான பண்பாட்டு அமைப்புகளான சங்கீத நாடக அக்காதமி, சாகித்ய அக்காதமி ஆகியவை இருப்பதே காரணம். இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திருச்சூரைச் சுற்றியே வாழ்கிறார்கள்.

ஆண்டுதோறும் மேமாதம் சித்திரை பூர நட்சத்திரத்தில் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் பூரத்திருவிழா கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு இது. இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள் மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன்கோயில்கள் உள்ளன. மேலும் திருச்சூரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலான குருவாயூர் உள்ளது. மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற கொடுங்கல்லுர் பகவதி கோயில் உள்ளது மற்றும் 23 கிலோமீட்டர் தொலைவில் திருப்பராயர் எனப்படும் இடத்தில் பிரசித்திபெற்ற இராமர் கோயில் உள்ளது. இந்தியாவின் நயகாரா என அழைக்கப்படும் அதிரம்பள்ளி அருவியும் இங்குள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சூர்&oldid=3882224" இலிருந்து மீள்விக்கப்பட்டது