பெரம்பலூர்
| பெரம்பலூர் | |
| — நகராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | டாக்டர். தாரேசு அகமது [3] |
| நகராட்சிதலைவர் | சி.ரமேஷ் |
| சட்டமன்றத் தொகுதி | பெரம்பலூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக) |
| மக்கள் தொகை | 29,698 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 150 மீட்டர்கள்s (490 அடி) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.municipality.tn.gov.in/perambalur |
பெரம்பலூர் (ஆங்கிலம்:Perambalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
பெயர் விளக்கம் [தொகு]
பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.[4] பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் இளம்புல்லூர்க் காவிதி என்னும் புலவர் ஒருவர் இருந்தார்)
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரம்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரம்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127
- ↑ "Perambalur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.