பெங்களூரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பெங்களூர்(பெங்களூரு) | |
| மாநிலம் - மாவட்டங்கள் |
கர்நாடகம் - பெங்களூர் நகரம் |
| அமைவிடம் | |
| பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
476.66 கிமீ²
|
| கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| மக்கள் தொகை (2006) - மக்களடர்த்தி |
6,158,677 - - 5,104,047 (5th) |
| நகரத் தந்தை | ஆர். நாராயணஸ்வாமி |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 560 0xx - +91 (0)80 - KA-01 to KA-05, KA-41, KA-50, KA-51 மற்றும் KA-53 |
பெங்களூர் (Bangalore) கர்நாடக மாநில தலைநகரம் ஆகும். இந்நகரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்றும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்மேற்கு கர்நாடகத்தின் மைசூர் பீடபூமியில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 65 இலட்சங்களாகும். இதைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கி.பி. 900 முதல் இருந்த போதிலும், கி.பி. 1537 முதலே தொடர்ந்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன. பெங்களூர் கெம்பே கௌடா என்பவரால் 1537-ல் கட்டமைக்கப் பட்டதாக நம்பப்படுகிறது. அவர் இந்த நகரத்தில் ஒரு கோட்டையை அமைத்து அதை விஜயநகர அரசின் ஒரு பகுதியாக்கினார்.
ஆங்கில ஆட்சியின்போது பெங்களூர் தென்னிந்தியாவில் காலனி அரசின் மையமாக உருவாக்கப்பட்டது.
பல பெரிய கல்லூரிகளும் ஆராய்ச்சி நிலையங்களும் நிறைந்த இந்த நகரம் இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு வாய்ந்தவைகளில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.
எனினும், ஒரு வளர்ந்த நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குவதால், இங்கு காற்று மாசுபடுதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்றம் முதலிய பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
பெங்களூர் நகரம் கடல் மட்டதிலிருந்து சராசரியாக 920 மீ. (3,018 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது இவ்வளவு உயரத்தில் இருப்பதால், இங்கு வருடத்தில் பெரும்பான்மையான மாதங்களில் மிதமான காலநிலை நிலவுகிறது.
[தொகு] மேலும் பார்க்க
- இந்திய அறிவியல் கழகம்
- விதான சௌதா
- விஸ்வேஸ்வரய்யா அறிவியல் அருங்காட்சியகம்
- கப்பன் பூங்கா
- லால்பாக் பூங்கா
- பெங்களூர் அரண்மனை
- கர்நாடகா உயர்நீதிமன்றம்
| உலகத்தமிழர் வாழ் நகரங்கள்| |
|
|---|---|
| சென்னை | மதுரை | பெங்களூர் | யாழ்ப்பாணம் |கொழும்பு | ரொறன்ரோ | சிங்கப்பூர் | கோலாலம்பூர் | லா சப்பல் - பாரிஸ் | இலண்டன் | |
| இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | |
|---|---|
| அகர்தலா | அய்சால் | பெங்களூரு | போபால் | புவனேசுவர் | சண்டிகர் | சென்னை | தமன் | தேராதூன் | தில்லி | திஸ்பூர் | காந்தி நகர் | கேங்டாக் | ஐதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவரத்தி | கோகிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பணஜி | பட்னா |புதுச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | சிம்லா | சில்வாசா | ஸ்ரீநகர் | திருவனந்தபுரம் | |