த. ரா. பேந்திரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

த. ரா. பேந்திரே என்பவர் கன்னட கவிஞர் ஆவார். இவரை வரமாக பெற்றதனால், வரகவி என்ற சிறப்பு பெயர் இவர்க்கு உண்டு. கன்னடத்தில் எழுதி, ஞானபீட விருது பெற்றவர்களில் இவரும் ஒருவர். அம்பிகாதனயதத்தா என்ற புனைபெயரில் எழுதியவர். அம்பிகாவின் மகன் தத்தன் என்பது இந்தப் பெயரின் பொருள். இவருக்கு கர்நாடக குல திலகம் என்ற பெயரும் உண்டு. தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே என்பது இவரது இயற்பெயர். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

எழுத்துத் துறை[தொகு]

பேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப் புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • 1922: கிருஷ்ணாகுமாரி;
 • 1934: மூர்த்தி மத்து காமகஸ்தூரி;
 • 1937: சகீகீத;
 • 1938: உய்யாலெ;
 • 1938: நாதலீலை;
 • 1943: மேகதூத (காளிதாசர் சமசுகிருதத்தில் எழுதிய மேகதூதத்தின் கன்னட மொழிபெயர்ப்பு)
 • 1946: ஹாடு பாடு;
 • 1951: கங்காவதரண;
 • 1956: சூர்யபான;
 • 1956: ஹ்ருதயசமுத்ர;
 • 1956: முக்தகண்ட;
 • 1957: சைத்யாலய;
 • 1957: ஜீவலகரி;
 • 1957: அரளு மரளு;
 • 1959: சஞ்சய;
 • 1960: உத்தராயண;
 • 1961: முகிலமல்லிகை;
 • 1962: யட்ச யட்சி
 • 1966: மரியாதை;
 • 1968: ஸ்ரீமாதா;
 • 1969: பா ஹத்தர;
 • 1970: இது நபோவாணி;
 • 1972: வினய;
 • 1973: மத்தெ ஸ்ராவணா பந்து;
 • 1977: ஒலவே நம்ம பதுகு;
 • 1978: சதுரோக்தி, இதர கவிதைகள்
 • 1982: பராகி;
 • 1982: காவ்யவைகரி;
 • 1983: தா லெக்கணகி தா தௌதி;
 • 1983: பாலபோதெ;
 • 1986: சைதன்யத பூஜெ;
 • 1987: பிரதிபிம்பகளு;

பெற்ற விருதுகள்[தொகு]

 • ஞானபீட விருது
 • பத்மஸ்ரீ விருது
 • சாகித்திய அகாதமி விருது
"http://ta.wikipedia.org/w/index.php?title=த._ரா._பேந்திரே&oldid=1685993" இருந்து மீள்விக்கப்பட்டது