பட்டடக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பட்டடக்கல்
—  நகரம்  —
பட்டடக்கல்லில் உள்ள நினைவுச் சின்னத் தொகுதி
பட்டடக்கல்
இருப்பிடம்: பட்டடக்கல்
, கர்நாடகம்
அமைவிடம் 16°01′09″N 75°52′55″E / 16.019167°N 75.881944°E / 16.019167; 75.881944ஆள்கூறுகள்: 16°01′09″N 75°52′55″E / 16.019167°N 75.881944°E / 16.019167; 75.881944
நாடு  இந்தியா
மாநிலம் கர்நாடகம்
மாவட்டம் பாகல்கோட்
அருகாமை நகரம் பாதமி
ஆளுநர்

[1]

முதலமைச்சர் சித்தராமையா[2]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


பட்டடக்கல் என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்துல் உள்ள மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது பாதமியில் இருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஐகோலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலையின் வேசர பாணிக் கட்டிடங்களின் தொடக்ககால வடிவங்களாக அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டில் இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந் நகரத்தில் இந்தியக் கட்டிடக்கலைப் பாணிகளான நாகரப் பாணி, திராவிடப் பாணி என்பவற்றைச் சேர்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன.

வரலாறு[தொகு]

பட்டடக்கல், தென்னிந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட சாளுக்கிய வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. இவர்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இங்கிருக்கும் கோயில்களைக் கட்டினர். இங்கே மொத்தம் பத்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று சமணர்களுடையது. நான்கு கோயில்கள் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியிலும், இன்னொரு நான்கு நாகரப் பாணியிலும் அமைந்துள்ளன. மிகுதி ஒன்று இரண்டும் கலந்த பணியைச் சேர்ந்தது.

சாளுக்கியர் பாணிக் கட்டிடக்கலை[தொகு]

பட்டடக்கல்லில் உள்ள காசி விசுவநாதர் கோயில்

ஐகோல் கட்டிடக்கலையில் ஒரு பள்ளி என்றால், பாதமி ஒரு கட்டிடக்கலைக் கல்லூரியாகவும், பட்டடக்கல்லை ஒரு கட்டிடக்கலைப் பல்கலைக் கழகமாகவும் கருதலாம். சாளுக்கியர் பாணி ஐகோலில் (கிபி 450) உருவாகியது. அக்காலத்துச் சிற்பிகள் பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளை வைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நாகரப் பாணியையும், திராவிடப் பாணியையும் கலந்து இன்னொரு தனித்துவமான பாணியை உருவாக்கினர். ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோயில் கட்டும் நடவடிக்கைகள் பாதமியில் இருந்து பட்டடக்கல்லுக்கு மாறின.

உலக பாரம்பரியக் களம்[தொகு]

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான பட்டடக்கல்லின் நினைவுச் சின்னத் தொகுதியுள் 10 நினைவுச் சின்னங்கள் அடங்கியுள்லன:

  • விருபக்சர் கோயில்
  • சங்கமேசுவரர் கோயில்
  • மல்லிகார்ச்சுனர் கோயில்
  • காசி விசுவநாதர் கோயில்
  • கடசித்தேசுவரர் கோயிலும் சம்புலிங்கேசுவரர் கோயிலும்
  • கல்கநாதர் கோயில்
  • சமணர் கோயில்
  • பாபநாதர் கோயில்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php

{{navbox | listclass = hlist |name = World Heritage Sites in India |title = இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்

|image =

Flag of India

|list1 =

ஆக்ரா கோட்டை · அஜந்தா குகைகள் · சாஞ்சி · சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா  · சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் · கோவா தேவாலயங்களும் கிறித்தவ மடங்களும் · எலிபண்டா குகைகள் · எல்லோரா குகைகள் · ஃபத்தேப்பூர் சிக்ரி · தஞ்சைப் பெரிய கோயில் · ஹம்பி · மாமல்லபுரம் · பட்டடக்கல் · உமாயூன் சமாதி · காசிரங்கா தேசியப் பூங்கா · கேவலாதேவ் தேசியப் பூங்கா · காசுராகோ · மகாபோதி கோயில் · மானசு வனவிலங்கு காப்பகம் · டார்ஜிலிங் மலை இரயில் பாதை · நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு · குதுப் மினார் · செங்கோட்டை · பீம்பேட்கா பாறை வாழிடங்கள் · கொனார்க் சூரியன் கோயில் · சூரியன் கோயில், குஜராத் · சுந்தர்பான் தேசியப் பூங்கா · தாஜ் மகால்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பட்டடக்கல்&oldid=1523956" இருந்து மீள்விக்கப்பட்டது