மாமல்லபுர மரபுச்சின்னங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாமல்லபுர கோயில்கள்* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | இந்தியா |
| வகை | பண்பாட்டுச் சின்னங்கள் |
| ஒப்பளவு | i, ii, iii, iv |
| மேற்கோள் | 249 |
| பகுதி† | ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய மரபுச்சின்னங்கள். |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1984 (8ஆவது பகுதி அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
மாமல்லபுர மரபுக்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கோரமண்டல் கரையில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை 1984ல் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இவை மாமல்லன் என்றழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.
யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை. [1]:
- மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
- குகைக்கோயில்கள் அல்லது மண்டபங்கள்
- அர்ச்சுனன் பாவசங்கீத்தனம் என்றழைக்கப்படும் மாமல்லபுர கங்கை மரபுவழி சின்னங்கள்.
- மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (சிவன்)
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "UNESCO Site 249 - Group of Monuments at Mahabalipuram". UNESCO World Heritage Site (1983-10-15). பார்த்த நாள் 2009-05-18.
பஞ்ச ரதக் கோயில் [தொகு]
-
Five rathas plaque.JPG
The Plaque at the Five Rathas in Mahabalipuram