சிதம்பரம் நடராசர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
தில்லை நடராசர் கோயில், சிதம்பரம்
புவியியல் ஆள்கூற்று:11°23′57″N 79°41′37″E / 11.399283°N 79.693565°E / 11.399283; 79.693565
பெயர்
புராண பெயர்(கள்):தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம்
பெயர்:சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
ஆங்கிலம்:Thillai Nataraja Temple
அமைவிடம்
ஊர்:சிதம்பரம்
மாவட்டம்:கடலூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருமூலநாதர் (மூலட்டனேஸ்வரா்
சபாநாயகா்
கூத்தப்பெருமாள்
விடங்கா்
மேருவிடங்கா்
தட்சிணமேருவிடங்கா்
ருத்ரர்
ஆருத்ரர்
பொன்னம்பலகூத்தா்
தில்லைவனநாதா்
தில்லைநாயகா்
தில்லைவாசா்
கனகசபை
கனகசபாபதி
கனகசுந்தரம்
கனகராசர்
கனகரத்னம்
சபாரத்னம்
சபாபதி
சபேசர்
ஸ்ரீசபா
திருச்சபைநாதர்
திருச்சிற்றம்பலநாதர்
சிற்றம்பலம்
அம்பலநாதா்
அம்பலவாணா்
அம்பலத்தரசா்
ஆடலரசா்
ஆடியபாதம்
கொஞ்சிதபாதம்
நடனசிவம்
நடனசபாபதி
நடராசர்
நடராசமூர்த்தி
நடராசசுந்தரம்
மோகன நடராசர்
நடேசர்
நடேசமூா்த்தி
நடேசுவரா்
தாண்டவமூா்த்தி
தாண்டவராயா்
ஆனந்ததாண்டவா்
சிதம்பரநாதா்
சிதம்பரமூர்த்தி
சிதம்பரேசுவரா்)
உற்சவர்:நடராஜா் (கனகசபைநாதா்)
தாயார்:உமையாம்பிகை (சிவகாமசுந்தாி)
தல விருட்சம்:தில்லைமரம்
தீர்த்தம்:சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு
வரலாறு
தொன்மை:3000-4000 வருடங்களுக்கு முன்
கட்டப்பட்ட நாள்:அறியவில்லை

நடராசர் கோயில் (Nataraja Temple, Chidambaram) அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.

கோவிலின் வரலாறு[தொகு]

சொல்லிலக்கணம்[தொகு]

தில்லை - தில்லை மரங்கள் இருந்த காட்டுப் பகுதி.

திருச்சிற்றம்பலம் -

கோயில் -

பெரும்பற்றப்புலியூர்[தொகு]

சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூஜை செய்ததால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித்தம் - இதயம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித்தம் + அம்பரம் - சிதம்பரம். என்ற பெயரே காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக சிதம்பரம் என்று மாறிவிட்டது.[5] மேலும் சித்தம்பரம் கோயில் ஆனது இதயஸ்தலமாக இவ்வூலகிற்கே இவ்விடத்தில் இருந்து விளங்குவதாகவும் கருதப்படுகிறது.

பொன்னம்பலம்[தொகு]

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.

சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

தல வரலாறு[தொகு]

ஆனந்த தாண்டவம்[தொகு]

  • ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.
  • 1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர்.
  • 2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.
  • 3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.
  • 4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது.
  • 5) இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. ஜெனிவாவில் உள்ள உலகின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான செர்ன் (CERN) என்ற இடத்தில் இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு[தொகு]

நடராசர்

வடிவமைப்பு[தொகு]

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.[6]

கோபுரங்கள்[தொகு]

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.

இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

கோபுரங்கள் மண்டபங்கள்[தொகு]

சிதம்பரம் நடராஜர் கோவிலின் இராஜ கோபுரம் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கலைநயமிக்க சிற்பங்கள் நிறைந்த ஆயிரங்கால் மண்டபம் விஜயநகர பேரரசின் தஞ்சை நாயக்க மன்னர்கள் அமைத்தார்கள்.

சந்நிதிகள்[தொகு]

விநாயகர் சந்நிதிகள்[தொகு]

முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் என பல்வேறு விநாயகர் சந்நிதிகள் இக் கோயிலில் அமைந்துள்ளன.

சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரே கூறினார் என தொன்மமொன்று உள்ளது.

நவகிரக சந்நிதிகள்

பதஞ்சலி சன்னதி -

கம்பத்து இளையனார் சந்நதி -

கோவில்கள்[தொகு]

சிதம்பரம் நடராசர் கோவிலில், கோவிலுக்குள் பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன.

சிவகாமசுந்தரி அம்மன் கோவில் - மூன்றாவது பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் சிவகாமசுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த சன்னதி அருகே யமன் மற்றும் சித்திரகுப்தனுக்கு சிலைகள் அமைந்துள்ளன.

கோவிந்தராஜபெருமாள் கோவில் - நடராசன் சந்நிதிக்கு நேரெதிரே அமைந்துள்ளது

பாண்டிய நாயகர் கோவில் - சிவகாம சுந்தரி கோவிலின் வடக்கே, பாண்டிய நாயகர் கோவில் அமைந்துள்ளது. இது முருகன் கோவிலாகும். இக்கோவிலில் ஆறுமுகம் கொண்ட முருகன், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் உள்ளார்.

நவலிங்க கோவில் - நவகிரகங்களால் வழிபடப்பட்ட இலிங்கங்கள் உள்ள கோவிலாகும்.

சபைகள்[தொகு]

சித்தசபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ளன.[7] பேரம்பலம் என்பது தேவசபை என்றும், நிருத்த சபை என்பது நடனசபை என்றும், கனகசபை என்பது பொன்னம்பலம் எனவும் அறியப்பெறுகிறது.

சித்தசபை[தொகு]

கனகசபை[தொகு]

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது, இது 64 ஆயகலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது,

நடனசபை[தொகு]

தேவசபை[தொகு]

இராஜசபை[தொகு]

தீர்த்தங்கள்[தொகு]

கோயிலில் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

  • பரமானந்த கூபம் - நடராசர் கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது.
  • குய்யதீர்த்தம் - நடராசர் கோயிலின் வடகிழக்கே கிள்ளைக்கு அருகே அமைந்துள்ளது.
  • புலிமடு - சிதம்பரம் கோயிலின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
  • வியாக்கிரபாத தீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு மேற்கில் இளமையாக்கினார் கோயிலிக்கு எதிரே அமைந்துள்ளது.
  • அனந்த தீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு மேற்கிலுள்ள திருவனந்தேச்சுரத்துக்கு கோயிலில் அமைந்துள்ளது.
  • நாகச்சேரி - அனந்தேச்சுரத்துக்கு மேற்கில் அமைந்துள்ளது.
  • பிரமதீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு வடமேற்கே இருக்கும் திருக்களாஞ்சேரியில் கோயிலில் அமைந்துள்ளது.
  • சிவப்பிரியை - நடராசர் கோயிலுக்கு வடக்கே உள்ள பிரமசாமுண்டி கோயிலின் முன் அமைந்துள்ளது.
  • திருப்பாற்கடல் - சிவப்பிரியைக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது.

மூலவர் தோற்றம்[தொகு]

மூலவர் திருமூலனாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார்.

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது

கோவில் தேர்[தொகு]

ஆனந்த தாண்டவம்[தொகு]

சிதம்பர ரகசியம்[தொகு]

இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும்.இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான்.ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.

வழிபாடு[தொகு]

உலகில் உள்ள அனைத்து சிவகலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன (இதில் திருவாரூர் தியாகராஜா் சுவாமியயை) தவிர என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக மற்ற சிவாலயங்களை விட தாமதமாக இக்கோவிலில் அர்த்த சாம பூசை நடைபெறுகிறது.

இவ்வாறு அனைத்து சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்தசாம பூசையில் கலந்து கொள்வது ஈடானதாகக் கருதப்படுகிறது.

ஆறு கால பூசை[தொகு]

சிதம்பரம் நடராசருக்கு தினந்தோறும் ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன. ஆறு கால பூசையென்பது,

  1. காலை சந்தி
  2. இரண்டாங் காலம்
  3. உச்சி காலம்
  4. சாயங் காலம்
  5. ரகசிய பூசை காலம்
  6. அர்த்த சாமம்

ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள்[தொகு]

இந்து தொன்மவியல் கணக்கின் படி மனிதர்களது ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். ஒரு நாளில் ஆறு கால பூசைகள் நடைபெறுவது போல தேவர்கள் செய்யும் பூசையாக ஆண்டுக்கு ஆறு பூசைகள் சிதம்பரம் கோவிலில் நடைபெறுகின்றன. அவையாவன..

  1. சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிசேகம்
  2. ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம்
  3. ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம்
  4. புராட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம்
  5. மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம்
  6. மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிசேகம்

விழாக்கள்[தொகு]

தில்லை அருள்மிகு நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தேர்திருவிழாவும், மார்கழி மாதம் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்திருவிழாவும் என இரு முறை திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். இத்திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள். தில்லை ஸ்ரீ நடராஜர் கோயிலில் மேற்கு கோபுரம் எழுந்தருளியுள்ள குமரக்கோட்டம் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.

பாடல் பெற்ற தலம்[தொகு]

நால்வர்[தொகு]

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.

சிதம்பரம் கோயில்

ஆழ்வார்கள்[தொகு]

வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது.

இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.

கலைகள்[தொகு]

நாட்டியம்[தொகு]

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.

கல்வெட்டுகள்[தொகு]

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் கோவிலின் இராஜ கோபுரம் மற்றும் தஞ்சை நாயக்க மன்னர்கள் கோயிலின் பிரகாரங்கள் கனகசபை உட்பட ஒன்பது மண்டபங்களை கட்டியதாகவும் பல்வேறு திருப்பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.

நூல்கள்[தொகு]

தமிழகத்திலுள்ள கோவில்களில் அதிகமான நூல்களினாலும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோவிலாக சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளது.[8] இத்தலத்தினைப் பற்றி நாற்பத்தி நான்கு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.

  1. தேவாரம் - 11 திருப்பதிகங்கள்
  2. திருவாசகம் - 25 திருப்பதிகங்கள்
  3. திருக்கோவையார்
  4. திருமுறைக் கண்ட புராணம்
  5. திருவிசைப்பா
  6. திருபல்லாண்டு
  7. திருமந்திரம்
  8. கோயில் நான்மணிமாலை
  9. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
  10. பெரியபுராணம்
  11. சிதம்பரம் மணிக்கோவை
  12. சிதம்பரச் செய்யுட் கோவை
  13. சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
  14. தில்லைக்கலம்பகம்
  15. தில்லையுலா
  16. மூவரு லா
  17. தில்லை யமகவந்தாரி
  18. சிதம்பரவெண்பா
  19. சிதம்பர சபாநாத புராணம்
  20. பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்
  21. புலியூர் வெண்பா
  22. நடேசர் திருவருட்பா
  23. நடராச திருவருட்பா
  24. நடராசர் சதகம்
  25. நடராசர் திருப்புகழ்
  26. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
  27. சேக்கிழார் புராணம்
  28. சிவகாமியம்மைப் பதிகம்
  29. தில்லை கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி
  30. தில்லை நவமணி மாலை
  31. சிதம்பர விலாசம்
  32. பரமரகசிய மாலை
  33. திருவருட்பா
  34. தில்லைத் திருவாயிரம்
  35. புலியூர் புராணம்
  36. சிதம்பரப் புராணம்
  37. நடராஜர் காவடிச்சிந்து
  38. நடராசர் பத்து
  39. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்
  40. சிதம்பரம் பட்டியல்
  41. முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்
  42. சிதம்பரம் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்
  43. தில்லை பாதி நெல்லை பாதி
  44. சிதம்பரம் சேஷத்திர மகிமை

கோயில் நிர்வாகம்[தொகு]

தில்லை நடராசர் கோவில் சோழர்களால் நிர்வகிக்கபட்டு வந்தது. பின்னர் விஜயநகர மன்னர்களாலும் தஞ்சை நாயக்க மன்னர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு பெரும்பாலான கோவில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. தற்போது ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பே எம். ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.[9] தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் பின்னணியில் ,2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறினர். முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரிசெய்ய கோவில் நிர்வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார்வையிடலாம் என்று கூறியுள்ளனர். மேலும் , சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.[10]

கும்பாபிஷேகம்[தொகு]

இக்கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 1.5.2015 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு காலை 8.00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராசர் வீற்றுள்ள சித்சபை, ராஜ்ய சபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் மற்றும் நான்கு ராஜகோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 8.25 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் தெருவடைச்சான் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.[11]

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-28. பார்க்கப்பட்ட நாள் 2011-11-30.
  2. S. Padmanabhan. (1977). Temples of South India. Kumaran Pathippagam
  3. வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10
  4. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  5. கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:127
  6. சுகி. சிவம், நல்ல வண்ணம் வாழலாம், கற்பகம் புத்தகாலயம் – சென்னை, 14ஆம் பதிப்பு திசம்பர் 2007, பக்.66
  7. [சிதம்பரம் ஆலயம் ஓர் அதிசயம் 5 சபைகள் கட்டுரை- மாலைமலர் 11-03-2015 இணைப்பு நூல் பக்16]
  8. [சிதம்பரம் ஆலயம் ஓர் அதிசயம் - மாலைமலர் 11-03-2015 இணைப்பு நூல் பக்28]
  9. "தில்லை வழக்கு: அதிமுக அரசு அலட்சியம் என திமுக குற்றச்சாட்டு". பிபிசி. 7 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
  10. "சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?". தீக்கதிர்: pp. 4. 8 சனவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 சனவரி 2014. 
  11. "சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2015.

வெளி இணைப்புகள்[தொகு]