ஹம்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி* | |
|---|---|
| யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
| நாடு | இந்தியா |
| வகை | பண்பாடு |
| ஒப்பளவு | (i)(iii)(iv) |
| மேற்கோள் | 241 |
| பகுதி† | ஆசியா-பசிபிக் |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1986 (10ஆவது, 15ஆவது அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
ஹம்பி (Hampi) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விஜயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ் பெற்ற விருபக்ஷ கோயில் இவ்விடத்திலேயே உள்ளது. ஹம்பி, விஜயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது. இது பழைய நகரத்தின் மத்திய பகுதியில் இருப்பதனால், இதனால் இதையும் அழிந்த நகரத்தையும் ஒன்றாக எண்ணிக் குழம்பும் நிலை உள்ளது. விஜய நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி (Group of Monuments at Hampi) என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஹம்பி என்னும் பெயர் கன்னடப் பெயரான ஹம்பே என்பதன் ஆங்கிலப்படுத்தல் ஆகும். ஹம்பே என்னும் இந்தக் கன்னடச் சொல் துங்கபத்திரை ஆற்றின் பழைய பெயரான பம்பா என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது சில சமயங்களில் விஜய நகரம் என்றோ அல்லது விஜயநகர அரசர்களின் குலதெய்வமான விருபக்ஷரின் பெயரைத் தழுவி விருபக்ஷபுரம் என்றோ அழைக்கப்படுவதும் உண்டு.
[தொகு] வரலாறு
இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பி அடையாளம் காணப்படுவது உண்டு. ஹம்பியின் குடியேற்றங்கள் கி.பி முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகச் சொல்லப்படுகின்றது.
[தொகு] வெளியிணைப்புகள்
|
|
|
|---|---|
|
ஆக்ரா கோட்டை · அஜந்தா குகைகள் · சாஞ்சி · சம்பானர்-பாவகாட் தொல்லியல் பூங்கா · சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் · கோவா தேவலயங்களும் கன்னிமாடங்களும் · எலிபண்டா குகைகள் · எல்லோரா குகைகள் · ஃபத்தேப்பூர் சிக்ரி · தஞ்சைப் பெரிய கோயில் · ஹம்பி · மாமல்லபுரம் · பட்டடக்கல் · உமாயூன் சமாதி · கசிரங்கா தேசிய பூங்கா · கேலாதியோ தேசிய பூங்கா · காசுராகோ · மகாபோதி கோயில் · மானாசு வனவிலங்குகள் சரணாலயம் · டார்ஜிலிங் மலை இரயில் பாதை · நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு · குதுப் மினார் · செங்கோட்டை · பிம்பெட்கா பாறை வாழிடங்கள் · கொனார்க் சூரியன் கோயில் · சுந்தர்பான் தேசியப் பூங்கா · தாஜ் மகால் |
|
