முதலாம் நரசிம்ம பல்லவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
சிம்ஹவர்மன் கந்தவர்மன்
விஷ்ணுகோபா குமாரவிஷ்ணு I
கந்தவர்மன் II வீரவர்மன்
கந்தவர்மன் III சிம்ஹவர்மன் II
கந்தவர்மன் IV நந்திவர்மன் I
குமாரவிஷ்ணு II புத்தவர்மன்
குமாரவிஷ்ணு III சிம்ஹவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணு கிபி 555 - 590
மகேந்திரவர்மன் I கிபி 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668
மகேந்திரவர்மன் II கிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 796
தந்திவர்மன் கிபி 775 - 825
நந்திவர்மன் III கிபி 825 - 869
அபராஜிதவர்மன் கிபி 882 - 901
edit

புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.

சாளுக்கியர்களுடன் போர்

கி.பி.642ல் நரசிம்மவர்மன் தனது படைத் தளபதி பரஞ்சோதி (விக்ரம கேசரி) உடன் வாதாபி நகரில் புகழ் பெற்ற சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை கொன்று வெற்றி கொண்டான். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபிக்கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். இவனது தளபதி பரஞ்சோதி சிறந்த சிவ பக்தர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்