சாத்புரா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்புரா தேசியப் பூங்கா
சாத்புரா மலைகள்
அமைவிடம்மத்தியப் பிரதேசம், இந்தியா
பரப்பளவு524 km2 (202 sq mi)
நிறுவப்பட்டது1981

சாத்புரா தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Satpura National Park) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஹோஸன்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சாத்புரா மலைத் தொடர்கள் என்ற பெயரிலிருந்து இதற்கு சாத்புரா தேசியப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த தேசியப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 524 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தப் பூங்கா போரி வனவிலங்குகள் காப்பகம் மற்றும் பாஞ்ச்மார்த்தி வனவிலங்குகள் காப்பகம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் 1427 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்த தேசியப் பூங்காவானது 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவானது கடல் மட்டத்தில் இருந்து 300 முதல் 1352 மீட்டர்கள் உயரம் உடையது. இதன் அருகில் உள்ள நகரம் பாஞ்ச்மார்த்தி ஆகும். அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் பிபாரியா ஆகும். இந்தப் பூங்கா பல்லுயிர்ப் பெருக்க பூங்காவாக விளங்குகிறது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கடமான்கள், புள்ளி மான்கள், நாற்கொம்பு மான்கள், இந்தியச் சிறுமான்கள், கடமாக்கள், காட்டுப்பன்றிகள், கரடிகள், புல்வாய்கள், நரிகள், முள்ளம்பன்றிகள் மற்றும் இந்திய மலை அணில்கள் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தப் பூங்காவில் மூலிகைத் தாவரங்கள், புற்கள் மற்றும் மூங்கில்கள் காணப்படுகின்றன.

உலகப் பாரம்பரியக் களம்[தொகு]

யுனெஸ்கோ நிறுவனம் சூலை 2021-இல் இந்தியாவின் ஆறு பண்பாட்டு களங்களை உத்தேச உலகப் பாரம்பரியக் களங்களாக தேர்வு செய்துள்ளது. அதில் சாத்புரா தேசியப் பூங்கா ஒன்றாகும்.[2][3][4][5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Satpura National Park". protectedplanet.net. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2013-12-12.
  2. 6 UNESCO heritage sites added in India
  3. Ramappa Temple: How a site is selected for World Heritage List
  4. 6 heritage sites on tentative Unesco list
  5. Six Indian places added to tentative list of UNESCO World Heritage Sites
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்புரா_தேசியப்_பூங்கா&oldid=3553386" இலிருந்து மீள்விக்கப்பட்டது