சமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமணர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமண சாதுக்கள்

இந்தியாவில் தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆருகதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மகாத்மா காந்தி பின்பற்றிய அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழ்ச் சமணர் அன்று அறியப்படுவர். வடநாட்டினின்று வந்த சமணரும் தமிழ்ச் சமணரும் கலாச்சார இரீதியாகவும் மொழி இரீதியாகவும் வேறுபட்டவர்கள் ஆவர். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரால் பின்பு இம்மதம் பிரசித்தப்படுத்தப்பட்டது.மகாவீரருக்கு முன்பு 24 தீர்த்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள்.

பொருளடக்கம்

சமண சமயப் பிரிவுகள்: [தொகு]

சமண சமயத்தில் திகம்பரர்கள்,சுவேதம்பரர்கள் என்ற இரு ஆதிப் பிரிவினர் உள்ளனர். இவற்றிலிருந்து பின்பு சுதனக்வாசி, சுவேதம்பர தேராபந்த், பிசாபந்த, முர்டிபுஜக போன்ற பிரிவுகள் தோன்றின.

சமணமும் தமிழ்நாடும் [தொகு]


தமிழர் சமயம்
ReligijneSymbole.svg
தமிழர் சமயம்
தமிழ்க் கடவுள்கள்
சித்தர் மெய்யியல்
சமணம்
பெளத்தம்
இஸ்லாம்
கிறிஸ்தவம்
வைணவம்
சைவ சமயம்
சைவ சித்தாந்தம்
இந்து சமயம்
வேதம்
வேதாந்தம்
பக்தி நெறி
அய்யாவழி
சமயம் அற்றோர்
மனிதநேயம்
அறியாமைக் கொள்கை
உலகாயதம்
இறைமறுப்பு

24 தீர்தங்கரர்களில் முதல்வரும் கடையவரும்

சமணம் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழிப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் மொழியில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது.

சங்ககாலத்துப் பாடல் ஒன்று இவர்களை 'உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாப படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடுகிறது. (அகம் 123)

பண்டைக் காலம் தொட்டு தமிழ்ச் சமணர்கள் தத்தம கால கட்டத்து வாழ்ந்த சைவ வைணவ அரசன்மார்களால் கழுவேற்றப்பட்டனர். இதற்கு இதிகாச சான்றுகளும் உள்ளன. திருநாவுக்கரசர் போன்ற சைவ நாயன்மார்களும் சமணர் கழுவேற்றத்தை ஆதரித்தர். இதுகொண்டு சமண மக்களின் ஜனத்தொகை மத்திம காலம் முதல் வெகுவாய் குறையத் தொடங்கியது.

"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன...தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன." [1]

சமணரும் தமிழும் [தொகு]

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம்மிக்க மொழி என்னும் அந்தஸ்தைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர்." [2]

ஐஞ்சிறுகாப்பியம் [தொகு]

இவற்றையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. செ. கணேசலிங்கன். (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 50.
  2. ஆ. வேலுப்பிள்ளை. (1985). தமிழர் சமய வரலாறு. சென்னை: பாரி புத்தகப்பண்ணை. பக்கம் 36.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சமணம்&oldid=1413831" இருந்து மீள்விக்கப்பட்டது