பெரியபுராணம்
பெரியபுராணம் என்பது 11 ஆம் அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சேக்கிழார் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல். சைவ சமயத்தைச் சார்ந்த இந்த நூல் சிவனடியார்களின் பெருமையையும் அவர்கள் வரலாற்றையும் எடுத்துக்கூற எழுந்த நூலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்.
இந்நூல் இரண்டு காண்டங்களாகவும் 13 சருக்கங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
முதற் காண்டத்தில்,
- திருமலைச் சருக்கம்,
- தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
- இலை மலிந்த சருக்கம்,
- மும்மையால் உலகாண்ட சருக்கம்,
- திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,
இரண்டாம் காண்டத்தில்
- வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
- வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
- பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
- கறைக்கண்டன் சருக்கம்,
- கடல்சூழ்ந்த சருக்கம்,
- பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
- மன்னிய சீர்ச் சருக்கம்,
- வெள்ளானைச் சருக்கம்
என்னும் ஏழு சருக்கங்களும் அமைந்துள்ளன.
13 சருக்கங்களிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் அவற்றில் பேசப்படும் சிவனடியார்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:
| சருக்க எண் | பாடல்கள் | அடியார்கள் |
|---|---|---|
| 1 | 349 | - |
| 2 | 201 | 7 |
| 3 | 422 | 7 |
| 4 | 298 | 6 |
| 5 | 633 | 7 |
| 6 | 1734 | 6 |
| 7 | 303 | 5 |
| 8 | 115 | 8 |
| 9 | 41 | 5 |
| 10 | 47 | 5 |
| 11 | 24 | 7 |
| 12 | 58 | 7 |
| 13 | 53 | 1 |
[தொகு] பழமொழி
4286 செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
|
||||||||