திருவிசைப்பா
|
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
|
9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
திருவிசைப்பா ( திருமாளிகைத் தேவர் • சேந்தனார் • கருவூர்த் தேவர் • பூந்துருத்தி நம்பிகாடநம்பி • கண்டராதித்தர் • வேணாட்டடிகள் • திருவாலியமுதனார் • புருடோத்தம நம்பி • சேதிராயர் ) திருப்பல்லாண்டு ( சேந்தனார் ) |
|
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
ஆலவாய் உடையார் • காரைக்கால் அம்மையார் • ஐயடிகள் காடவர்கோன் • சேரமான் பெருமான் • நக்கீரர் • கல்லாடர் • கபிலர் • பரணர் • இளம்பெருமான் • அதிராவடிகள் • பட்டணத்தடிகள் • நம்பியாண்டார் • |
|
|
திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருப்பல்லாண்டு. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்.[1]
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
| ஆசிரியர் | பாடல் பெற்றதலம் | பாடிய பதிகங்களின் எண்ணிக்கை |
|---|---|---|
| திருமாளிகைத்தேவர் | தில்லை | 45 |
| சேந்தனார் | திருவீழிமிழலை,திருவாவடுதுறை,திருவிடைக்கழி | 3 |
| கருவூர்த்தேவர் | 10 | |
| பூந்துருத்தி நம்பி காடநம்பி | 2 | |
| கண்டராதித்தர் | 1 | |
| திருவாலி அமுதனார் | 4 | |
| புருடோத்தம நம்பி | 2 | |
| சேதிராயர் | 1 |