இருபா இருபது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சித்தாந்த உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய இருபா இருபது 20 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூலாகும். அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய இந் நூல், அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது.

இந்த நூலுக்கு இரண்டு பழைய உரைநூல்கள் உள்ளன.

  1. 1488-ல் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்ட இருபா இருபது உரை
  2. 1677-ல் திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான் எழுதிய உரை

உசாத்துணைகள்[தொகு]

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • அருணந்தி சிவாச்சாரியார், இருபா இருபது, மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபா_இருபது&oldid=2992168" இலிருந்து மீள்விக்கப்பட்டது