மகா சிவராத்திரி
மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்".
பொருளடக்கம் |
சிவராத்திரி விரதம் வகைகள் [தொகு]
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
- மகாசிவராத்திரி
- யோகசிவராத்திரி
- நித்திய சிவராத்திரி
- பட்ஷிய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள் [தொகு]
முதல் யாமம் [தொகு]
- அபிஷேகம் - பஞ்சகவ்யம்
- அலங்காரம் - வில்வம்
- அர்ச்சனை - தாமரை
- நிவேதனம் - பாற்சாதம்
- பட்டு - செம்பட்டு
- தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
- மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
- புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
- ஒளி- புட்பதீபம்
இரண்டாம் யாமம் [தொகு]
- அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
- அலங்காரம் - குருந்தை
- அர்ச்சனை - துளசி
- நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
- பட்டு - மஞ்சள் பட்டு
- தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
- மணம் - அகில், சந்தணம்
- புகை - சாம்பிராணி, குங்குமம்
- ஒளி- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம் [தொகு]
- அபிஷேகம் - தேன்,பாலோதகம்
- அலங்காரம் - கிளுவை, விளா
- அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்
- நிவேதனம் - எள்அன்னம்
- பட்டு - வெண் பட்டு
- தோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி
- மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
- புகை - மேகம், கருங் குங்கிலியம்
- ஒளி- ஐதுமுக தீபம்
நான்காம் யாமம் [தொகு]
- அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
- அலங்காரம் - கரு நொச்சி
- அர்ச்சனை - நந்தியாவட்டை
- நிவேதனம் - வெண்சாதம்
- பட்டு - நீலப் பட்டு
- தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
- மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
- புகை - கர்ப்பூரம், இலவங்கம்
- ஒளி- மூன்று முக தீபம்
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள் [தொகு]
- திருக்கேதீச்சரப் பதிகங்கள்
- திருவண்ணாமலைப் பதிகங்கள்
உசாத்துணைகள் [தொகு]
- விரத விதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோயில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, மன்னார். இலங்கை
வெளிப்புற இணைப்பு [தொகு]
- "சிவராத்திரி விஷேசமானது ஏன்?" முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான கட்டுரை. (தமிழில்)
|
|
|
|---|---|
| போகி * மகர சங்கிராந்தி * தைப்பொங்கல் * மாட்டுப் பொங்கல் * காணும் பொங்கல் * தைப்பூசம் * தை அமாவாசை * மகா சிவராத்திரி * மாசி மகம் * ஹோலி * பங்குனித் திங்கள் * பங்குனி உத்தரம் * தமிழ்ப் புத்தாண்டு * சித்திரைப் பரணி * சித்திரா பௌர்ணமி * உகாதி * இராம நவமி * திருவிளக்குப் பூசை * வைகாசி விசாகம் * ஆனி உத்தரம் * ஆடிப்பூரம் * ஆடி அமாவாசை * ஆடிச் செவ்வாய் *வரலட்சுமி நோன்பு * கிருஷ்ண ஜெயந்தி * ஓணம் * ஆவணி சதுர்த்தி * ஆவணி மூலம் * ரக்ஷா பந்தன் * விநாயக சதுர்த்தி * நவராத்திரி நோன்பு * விஜயதசமி * தீபாவளி * கந்த சஷ்டி * கேதாரகௌரி விரதம் * கார்த்திகை விளக்கீடு * திருவாதிரை நோன்பு * பிரதோஷ விரதம் * ஏகாதசி விரதம் * வைகுண்ட ஏகாதசி * புரட்டாதிச் சனி * திருவெம்பாவை நோன்பு * கும்பமேளா * மார்கழி நோன்பு * மார்கழி உற்சவம் |