முருகன்
|
||||||||||||||||||||||
முருகன் இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப் படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப் படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப் படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] அறு படை வீடுகள்
- திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
- திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
- பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
- சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
- திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
- பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.
[தொகு] முருகன் குறித்த பழமொழிகள்
- வேலை வணங்குவதே வேலை.
- சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
- வயலூர் இருக்க அயலூர் தேவையா?
- காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
- அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
- முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
- சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
- கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
- கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
- பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
- சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
- செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
- திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
- வேலனுக்கு ஆனை சாட்சி.
- வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
- செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் முருகன் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?-தகவல்கள்
- நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை
- முருகனின் அறுபடை வீடுகள்
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?-தகவல்கள்
- கீற்று இதழில் மாமல்லை அருகில் சங்க கால முருகன் கோவில் கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை
- கந்தபுராணம் : முருகன் உதித்தனன் உலகம் உய்ய
- கந்த சஷ்டி விரதம்