நாயன்மார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமய குரவர்கள்
யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலில் நாயன்மார்கள் சிலைகள்

கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார் (Nayanars) எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர்.

பொருளடக்கம்

சமயக் குரவர்கள் [தொகு]

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

சிவன் கோவிலில் உள்ள 63 நாயன்மார்

பெரியபுராணம் [தொகு]

இவர்களின் வரலாறு சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.

நாயன்மாரில் பெண்கள் [தொகு]

அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

நாயன்மாரின் பட்டியல் [தொகு]

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு மணிக்கு நிமிடம் 60. ஒரு நிமிடத்துக்கு வினாடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.[1]

'
எண் பெயர் குலம் பூசை நாள் நின்ற நெறி
1 அதிபத்தர் பரதவர்
2 அப்பூதியடிகள் அந்தணர்
3 அமர்நீதி நாயனார் வணிகர் ஆனி பூரம்
4 அரிவட்டாயர் வேளாளர்
5 ஆனாய நாயனார் இடையர்
6 இசைஞானியார் ஆதி சைவர் சித்திரை
7 இடங்கழி நாயனார் செங்குந்தர் குல குறுநில மன்னர்[2][3]
8 இயற்பகை நாயனார் வணிகர்
9 இளையான்குடிமாறார் வேளாளர்
10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர்
11 எறிபத்த நாயனார்

செங்குந்தர் [4][5]

12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர் ஆனி ரேவதி
13 ஏனாதி நாதர் சான்றார்
14 ஐயடிகள் காடவர்கோன் குறுநில மன்னர்
15 கணநாதர் அந்தணர்
16 கணம்புல்லர்

செங்குந்தர் [6][7]

17 கண்ணப்பர் வேடர்
18 கலிய நாயனார் செக்கார்
19 கழறிற்ற்றிவார் அரசர்
20 கழற்சிங்கர் குறுநில மன்னர் வைகாசி பரணி
21 காரி நாயனார்

செங்குந்தர் [8][9]

22 காரைக்கால் அம்மையார் வணிகர்
23 குங்கிலியகலையனார் அந்தணர்
24 குலச்சிறையார் மரபறியார்
25 கூற்றுவர்

செங்குந்தர் குல குறுநில மன்னர் [10][11]

26 கலிக்கம்ப நாயனார் வணிகர்
27 கோச் செங்கட் சோழன் அரசன்
28 கோட்புலி நாயனார் வேளாளர்
29 சடைய நாயனார் ஆதி சைவர்
30 சண்டேஸ்வர நாயனார் அந்தணர்
31 சத்தி நாயனார் வேளாளர்
32 சாக்கியர் வேளாளர்
33 சிறப்புலி நாயனார் அந்தணர்
34 சிறுதொண்டர் சாலியர் சித்திரை பரணி
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்
36 செருத்துணை நாயனார் வேளாளர் 8 8
37 சோமசிமாறர் அந்தணர் வைகாசி ஆயிலியம்
38 தண்டியடிகள்

செங்குந்தர் [12][13]

39 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர் சித்திரை சுவாதி
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர் வைகாசி மூலம்
41 திருநாவுக்கரசர் வேளாளர் சித்திரை சதயம்
42 திருநாளை போவார் புலையர்
43 திருநீலகண்டர் குயவர்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் வைகாசி மூலம்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
46 திருமூலர் இடையர்
47 நமிநந்தியடிகள் அந்தணர் வைகாசி பூசம்
48 நரசிங்க முனையர்

செங்குந்தர் குல குறுநில மன்னர் [14][15]

49 நின்றசீர் நெடுமாறன் அரசர்
50 நேச நாயனார் சாலியர்
51 புகழ்சோழன் அரசர்
52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர் ஆனி ஆயிலியம்
53 பூசலார் அந்தணர்
54 பெருமிழலைக் குறும்பர்

செங்குந்தர்[16][17]

55 மங்கையர்க்கரசியார் அரசர் சித்திரை ரோகிணி
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர்
57 முருக நாயனார் அந்தணர் வைகாசி மூலம்
58 முனையடுவார் நாயனார் வேளாளர்
59 மூர்க்க நாயனார் வேளாளர்
60 மூர்த்தி நாயனார் வணிகர்
61 மெய்ப்பொருள் நாயனார்

செங்குந்தர் குல குறுநில மன்னர்[18][19]

62 வாயிலார் நாயனார் வேளாளர்
63 விறன்மிண்ட நாயனார் வேளாளர் சித்திரை திருவாதிரை

நாயன்மாரும் அவர்கள் பாடிய பாடல் தொகுதிகளும் [தொகு]

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் (பக்கம் 141 & 142 முதற்பதிப்பு-டிசம்பர் 1998)
  2. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:82
  3. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:17
  4. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:84
  5. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:25
  6. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:85
  7. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:26
  8. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:79
  9. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:15
  10. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி:83 எண்
  11. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:24
  12. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86
  13. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27
  14. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:78
  15. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:16
  16. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:80
  17. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:19
  18. புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:81
  19. காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:20

வெளி இணைப்புகள் [தொகு]

நாயன்மார்கள் Tamil Om4.JPG
அதிபத்த நாயனார் | அப்பூதியடிகள் நாயனார் | அமர்நீதி நாயனார் | அரிவாட்டாய நாயனார் | ஆனாய நாயனார் | இசைஞானியார் நாயனார் | இடங்கழி நாயனார் | இயற்பகை நாயனார் | இளையான்குடி மாறநாயனார் | உருத்திர பசுபதி நாயனார் | எறிபத்த நாயனார் | ஏயர்கோன் கலிக்காம நாயனார் | ஏனாதி நாத நாயனார் | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | கணநாத நாயனார் | கணம்புல்ல நாயனார் | கண்ணப்ப நாயனார் | கலிய நாயனார் | கழறிற்றறிவார் நாயனார் | கழற்சிங்க நாயனார் | காரி நாயனார் | காரைக்கால் அம்மையார் | குங்கிலியக்கலய நாயனார் | குலச்சிறை நாயனார் | கூற்றுவ நாயனார் | கலிக்கம்ப நாயனார் | கோச் செங்கட் சோழ நாயனார் | கோட்புலி நாயனார் | சடைய நாயனார் | சண்டேஸ்வர நாயனார் | சத்தி நாயனார் | சாக்கிய நாயனார் | சிறப்புலி நாயனார் | சிறுத்தொண்ட நாயனார் | சுந்தரமூர்த்தி நாயனார் | செருத்துணை நாயனார் | சோமாசிமாற நாயனார் | தண்டியடிகள் நாயனார் | திருக்குறிப்புத் தொண்ட நாயனார் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் | திருநாவுக்கரசு நாயனார் | திருநாளைப் போவார் நாயனார் | திருநீலகண்ட நாயனார் | திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் | திருநீலநக்க நாயனார் | திருமூல நாயனார் | நமிநந்தியடிகள் நாயனார் | நரசிங்கமுனையரைய நாயனார் | நின்றசீர் நெடுமாற நாயனார் | நேச நாயனார் | புகழ்ச்சோழ நாயனார் | புகழ்த்துணை நாயனார் | பூசலார் நாயனார் | பெருமிழலைக் குறும்ப நாயனார் | மங்கையர்க்கரசியார் நாயனார் | மானக்கஞ்சாற நாயனார் | முருக நாயனார் | முனையடுவார் நாயனார் | மூர்க்க நாயனார் | மூர்த்தி நாயனார் | மெய்ப்பொருள் நாயனார் | வாயிலார் நாயனார் | விறன்மிண்ட நாயனார்
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=நாயன்மார்&oldid=1370135" இருந்து மீள்விக்கப்பட்டது