குறும்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறும்பர்களின் சடங்குகள்

குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இந்தியாவின் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி குருமன் பழங்குடி கன்னடம் ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாய்க்கர் என்பன ஆகும்.இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர்.

குறும்பர்
வகைப்படுத்தல்: சாதி/தங்கர் (இடையர்)(சத்திரியர்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை: வட இந்தியா, மேற்கு இந்தியா, தென்னிந்தியா, மற்றும் மத்திய இந்தியா
மொழி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம்
சமயம் இந்து

வெளியிணைப்புகள் [தொகு]

இந்திய வரலாற்று நூலாசிரியரான வின்சென்ட் சிமித் என்பவர், தமது 'பழைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற் பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஃலவர் என்னும் பாரசீக மரபினர்' என்று கூறுகிறார்; பிறகு அவரே மறுபதிப்பில் தம் கூற்றை மறுக்கிறார். எலியட் செவேல் முதலியோர் தொண்டை மண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் முடிவு செய்தனர்.

மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று, அவர்தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்டை மண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத்தில் தொண்டை மண்டலம் எனப்பட்டது

"http://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பர்&oldid=1361670" இருந்து மீள்விக்கப்பட்டது