சேரர்
| சேர மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலச் சேரர்கள் | |
| சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் | கி.மு 1200 (?) |
| கடைச்சங்க காலச் சேரர்கள் | |
| கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
| உதியஞ்சேரலாதன் | கி.பி. 45-70 |
| இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | கி.பி. 71-129 |
| பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | கி.பி. 80-105 |
| களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் | கி.பி. 106-130 |
| செங்குட்டுவன் | கி.பி. 129-184 |
| அந்துவஞ்சேரல் இரும்பொறை | (காலம் தெரியவில்லை) |
| செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை | கி.பி. 123-148 |
| ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | கி.பி. 130-167 |
| தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை | கி.பி. 148-165 |
| இளஞ்சேரல் இரும்பொறை | கி.பி. 165-180 |
| குட்டுவன் கோதை | கி.பி. 184-194 |
| மாரிவெண்கோ | காலம் தெரியவில்லை |
| சேரமான் வஞ்சன் | காலம் தெரியவில்லை |
| மருதம் பாடிய இளங்கடுங்கோ | காலம் தெரியவில்லை |
| சேரமான் கணைக்கால் இரும்பொறை | காலம் தெரியவில்லை |
| சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை | காலம் தெரியவில்லை |
| பிற்காலச் சேரர்கள் | |
| சேரமான் பெருமாள் | கி.பி. 8ஆம் நூற்றாண்டு |
| edit | |
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] எல்லைகள்
சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.
[தொகு] நகரங்கள்
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும். தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).
[தொகு] மன்னர்கள்
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
[தொகு] ஆட்சியாண்டுகள்
சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்[1] ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 25 ஆண்டுகள்
- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
- செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
- செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
- இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
- சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் (கிமு 1200)
- உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129
- பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105
- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130
- சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184
- அந்துவஞ்சேரல் இரும்பொறை
- செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165
- இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180 ==
- குட்டுவன் கோதை - கி.பி. 184-194
- சேரமான் வஞ்சன்
- மருதம் பாடிய இளங்கடுங்கோ
- சேரமான் கணைக்கால் இரும்பொறை
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
[தொகு] படைபலம்
| “ |
"முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்." |
” |
[தொகு] மேலும் காண்க
[தொகு] மேற்கோள்
- ↑ சு. இரத்தினசாமி, சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி), மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.
- ↑ பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42
|
||||||||