பாமினி சுல்தானகம்
|
|||||||||||||||||||||||||||
பாமினி சுல்தானகம் (Bahmani Sultanate) என்பது இந்திய தக்காணப் பகுதியில் அமைந்த ஒரு இசுலாமியச் சுல்தானகம். மேலும் இதுவே தென்னிந்தியாவில் அமையப்பெற்ற முதல் சுதந்திர மற்றும் ஒரே சன்னி இசுலாம் பேரரசு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது.
இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அஹமதுநகர், பேரர், பீதர்,பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய இந்த ஐந்து பேரரசுகளே பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன.
[தொகு] பாமினி சுல்தான்கள்
பாமினி சுல்தான்கள், தென்னிந்தியப் பகுதிகளை 191 ஆண்டுகள் ஆண்டனர். பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது.அவர்களின் பெயர்களுக்கு பின்வரும் சா(shah=ஷா) என்பது மரபுப் பெயராகும்.
[தொகு] தலைநகரம்1
- இந்திய நாட்டின் கருநாடக மாநிலத்திலுள்ள குல்பர்கா ( 75 ஆண்டுகள் )
- எட்டு சுல்தான்கள், இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
1. அலாவுதின் பாமன் சா - கி.பி. 1347 - 1358
2. முதலாம் முகம்மது ஷா - கி.பி. 1358 - 1375
3. அலாவுதின் முசகிது சா - கி.பி. 1375 - 1378
4. தாவுத் சா I - கி.பி. 1378 - 1378
5. இரண்டாம் முகம்மது சா - கி.பி. 1378 - 1397
6. கியாசுதின் தோமதன் சா - கி.பி. 1397 - 1397
7. சம்சுதின் தாவுத் சா II - கி.பி. 1397 - 1397
8. தசிவுதின் பைரோசு சா - கி.பி. 1397 - 1422
[தொகு] தலைநகரம்2
9. சிகாபுதின் அகம்மது சா I - கி.பி. 1422 - 1436
10. அலாவுதின் அகம்மது சா II - கி.பி. 1436 - 1458
11. அலாவுதின் உமாயுன் சா - கி.பி. 1458 - 1461
12. நிசாமுதின் அகம்மது சா III - கி.பி. 1461 - 1463
13. சம்சுதின் முகம்மது சா III - கி.பி. 1463 - 1482
14. சிகாபுதின் மமூத் - கி.பி. 1482 - 1518
15. அகம்மது சா IV - கி.பி. 1518 - 1520
16. அலாவுதின் சா - கி.பி. 1520 - 1523
17. வைவுல்லா சா - கி.பி. 1523 - 1526
18. கலீம்வுல்லா சா - கி.பி. 1526 - 1538
[தொகு] கலாச்சாரம்
பாமினி சுல்தான்கல், இராணீய மன்னர் பரம்பரையான பாமான் வம்சத்தில் வந்தவர்கள் என நம்பப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாரசீக கலாச்சாரத்தையே பின்பற்றினார். இவர்களது காலத்தில்தான் பாரசீக கலாச்சாரம் இந்தியாவில் பரவ தொடங்கியது.
[தொகு] இதையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
- தக்காணத்து ஆட்சியாளர்கள்(ஆங்கிலத்தில்)
- Hameed Akhtar Siddiqui, இந்திய தக்காணப் பீடபூமியின் பாமன குல்பர்க்கா சுல்தானியத்தினிய வரலாறு (ஆங்கிலத்தில்)
- Library of Congress - பாமினி சுல்தானாத்தின் தோற்றம் (ஆங்கிலத்தில்)
|
||||||||