இந்தியப் பிரிவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியப் பிரிவினை (Partition of India, தேவநாகரி: हिंदुस्तान की त‌‌‌‍क़्सीम) என்பது 1947இல் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரித்தானிய இந்தியப் பேரரசை ஆங்கிலேயர்கள் மத ரீதியாகப் பிரித்தமையைக் குறிக்கும். இந்த நிகழ்வு காரணமாக இந்திய ஒன்றியம் (பின்னர் இந்தியக் குடியரசு), மற்றும் பாக்கித்தான் மேலாட்சி ஆகிய தனிநாடுகள் உருவாக்கப்பட்டன.

இப்பிரிவினை இந்திய விடுதலைச் சட்டம் 1947 இல் அறிவிக்கப்பட்டு, பிரித்தானிய இந்தியா கலைக்கப்படக் காரணமாய் அமைந்தது. இப்பிரிவினையால் சில நூறாயிரம் பொருட் சேதம் மட்டுமன்றி 12 .5 மில்லியன் மக்கள் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.[1]. இம்மூர்க்கப் பிரிவினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர சந்தேகத்தை விதைத்தது. இந்த சந்தேகம் இந்நாள் வரை இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவிற்கு இடைஞ்சலாய் இருந்து வருகின்றது.

முன்னாள் பஞ்சாப் மாநிலம் இந்தியப் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாபாக பிரிந்தது. வங்காள மாகாணமும் மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக பிரிந்தது. மேலும் தொடர்வண்டி துறை, இராணுவம், மைய கருவூலம் போன்ற சொத்துகளும் பிரிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வரலாற்றில் மிக வேகமான மக்கள் இடமாற்றம் நடந்தது. மொத்தத்தில் 17.9 மில்லியன் மக்கள் இட மாற்றியுள்ளனர், ஆனால் இதில் 14.5 மில்லியன் மக்கள் மட்டும் தனது செல்லிடத்தை சேர்ந்தனர்.

தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளை மட்டும் இந்த நிகழ்வு பாதிப்படைய வைத்தது. பிரித்தானிய இந்திய பேரரசில் பர்மா, மாலைதீவுகள், இலங்கை போன்ற வேறு நாடுகள் தனியாக விடுதலை பெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_பிரிவினை&oldid=1365521" இருந்து மீள்விக்கப்பட்டது