மவுண்ட்பேட்டன் பிரபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பர்மாவின் கோமகன் மவுண்ட்பேட்டன் | |
|
இந்தியாவின் ஆளுநர்
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 24, 1947 – ஆகஸ்ட் 15 1947 |
|
| முன்னவர் | ஆர்ச்சிபால்ட் வாவெல் |
| பின்வந்தவர் | எவருமில்லை |
|
|
|
| பிறப்பு | ஜூன் 25, 1900 இங்கிலாந்து |
| இறப்பு | ஆகஸ்ட் 27, 1979 அயர்லாந்து |
| வாழ்க்கைத் துணை |
எட்வினா மவுண்ட்பேட்டன் |
| துறை | ஆங்கிலக் கடற்படைத் தளபதி |
| சமயம் | ஆங்கிலிக்கன் |
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயனம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.