அயர்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அயர்லாந்து Ireland Éire Airlann |
|
|---|---|
![]() வடமேற்கு ஐரோப்பா கண்டம், கிழக்கே பெரிய பிரித்தானியா. |
|
| புவியியல் | |
| அமைவு | மேற்கு ஐரோப்பா |
| பரப்பளவு | 84,412 கிமீ² (32,591 சதுர மைல்) |
| உயர் புள்ளி | கரண்ட்டூஹில் (1,038 மீ (3,406 அடி)) |
| ஆட்சி | |
| பெரிய நகரம் | டப்ளின் |
| ஆட்சிப் பிரிவு | வட அயர்லாந்து |
| பெரிய நகரம் | பெல்பாஸ்ட் |
| இனம் | |
| மக்கள் தொகை | அண்ணளவாக 6 மில்லியன் (2007 தரவுகள்) |
| ஆதி குடிகள் | ஐரிஷ் |
அயர்லாந்து ஐரோப்பா கண்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் மேற்குப் பகுதியில அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும்.
[தொகு] புவியியல்
அயர்லாந்து தீவு இரண்டு வெவேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது:
- அயர்லாந்து குடியரசு (அயர்லாந்து இதன் சட்டப் பெயர்[1]), விடுதலை பெற்ற ஒரு தனி நாடு. இதன் தலைநகர் டப்ளின்.
- வட அயர்லாந்து, இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவு. இதன் தலைநகர் பெல்பாஸ்ட்.


