இந்திய ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய ஒன்றியம்

Union of India

டொமினியன்
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|]] British Raj Red Ensign.svg
1947 – 1950 Flag of India.svg [[இந்தியக் குடியரசு|]]
Flag சின்னம்
கொடி தேசியச் சின்னம்
இந்தியா அமைவிடம்
தலைநகரம் புது டில்லி
மொழி(கள்) ஆங்கிலம், இந்திய மொழிகள்
அரசு அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி
இந்தியாவின் பேரரசர்
 - 1947-50 ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுனர்
 - 1947-48 மவுண்ட்பேட்டன் பிரபு
 - 1948-50 ராஜாஜி
பிரதமர்
 - 1947-50 ஜவகர்லால் நேரு
பண்டைக்காலம் பனிப்போர்
 - இந்திய விடுதலைச் சட்டம், 1947 ஆகஸ்ட் 15, 1947
 - Iஇந்திய-பாகிஸ்தான் போர், 1947 1947-48
 - இந்தியக் குடியரசு நாள் ஜனவரி 26, 1950
நாணயம் இந்திய ரூபாய்

இந்திய ஒன்றியம் அல்லது இந்திய ஐக்கியம் (இந்தியன் யூனியன், Indian Union) அல்லது இந்திய மேலாட்சி அரசு (இந்திய டொமினியன், Dominion of India) ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு மேலாட்சி அரசுகளில் இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் நாட்டுத் தலைவராக ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான ஆறாம் ஜார்ஜ் இருந்தார். அரசுத் தலைவராக இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), பிரதமரும் இருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி ஜனவரி 26, 1950 ஆம் நாள் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.

சட்டத்துறைப் பயன்பாடு [தொகு]

இந்திய அரசிலமைப்பின் 300வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியக் குடியரசின் நீதிமன்றங்களில் “இந்திய ஒன்றியம்” / ”இந்தியன் யூனியன்” என்ற பெயர் இந்திய அரசினைக் குறிக்க பயனபடுத்தப்படுகிறது. (எ.கா. எஸ். ஆர். பொம்மை எதிர் இந்தியன் யூனியன்)

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஒன்றியம்&oldid=1351268" இருந்து மீள்விக்கப்பட்டது