அபுல் கலாம் ஆசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
கல்வி அமைச்சர்
பதவியில்
15 ஆகத்து 1947 – 1958
பிரதமர்ஜவஹர்லால் நேரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
(1888-11-11)11 நவம்பர் 1888
மக்கா
இறப்பு22 பெப்ரவரி 1958(1958-02-22) (அகவை 69)
தில்லி, இந்தியா
இளைப்பாறுமிடம்200px
பெற்றோர்
  • 200px
கையெழுத்து

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, வங்காள மொழி: আবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদ, உருது: مولانا ابوالکلام محی الدین احمد آزاد) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

பாரத ரத்னா[தொகு]

உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.[2] 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது.[3]

தேசிய கல்வி நாள்[தொகு]

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

கல்வி தந்தை[தொகு]

இந்தியாவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்க பாடுபட்டார், மேலும் அனைவருக்கும் இலவச ஆரம்ப கல்வி கிடைக்கவும் நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத் தான். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) அமைவதற்கும் பாடுபட்டார்.

நினைவு தபால் தலை[தொகு]

இவரது நினைவு தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

குறுஞ்செய்தி[தொகு]

மெளலானா ஆசாத் பிறந்த அதே தினத்தில் மிகச்சிறந்த விடுதலை வீரரான ஆச்சார்ய கிருபாளனியும் பிறந்தார். அவர் 1946 ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஆசாத்தைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

இதையும் பார்க்க[தொகு]

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Maulana Abul Kalam Azad: The Man Who Knew The Future Of Pakistan Before Its Creation (New Age Islam)
  2. தினமணி; விருதுகள், 'பட்டங்கள் அல்ல' கட்டுரை; 2-12-2013
  3. "Padma Awards Directory (1954-2007)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 7 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

50 years after death, Maulana hasn't got his due, Times of India, Avijit Ghosh http://articles.timesofindia.indiatimes.com/2008-02-22/india/27750926_1_al-hilal-muslim-leader-maulana-abul-kalam-azad பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_கலாம்_ஆசாத்&oldid=3541118" இலிருந்து மீள்விக்கப்பட்டது