பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட மாகாணங்கள், பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது.1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிமுடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடப்படுத்தினார்.) இவ்வாட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது.
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] மேற்கோள்கள்
- ↑ First the United Kingdom of Great Britain and Ireland then, after 1927, the United Kingdom of Great Britain and Northern Ireland
|
||||||||
| இது இந்தியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவது மூலம் விக்கிபீடியாவிற்கு உதவலாம் . |