இந்திய இடைக்கால அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய புகலிட அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியப் இடைக்கால அரசு (Provisional government of India) ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு நாடு கடந்த இந்திய அரசாகும். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்த பிறகு சுதந்திரத்திற்கான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்த இந்தியர்கள், முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆப்கானித்தானில் டிசம்பர் 1, 1915 இல் ஆப்கான் அரசின் அனுமதியுடன் இதை நிறுவினர். இரண்டாவது முறையாக இந்திய ஆசாத் கிந்த் அரசாங்கம் என்ற பெயரில் அகடோபர் 21, 1943ல் சிங்கப்பூரில் சப்பான் உதவியுடன் அமைக்கப்பட்டது.

முதல் அரசு[தொகு]

இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆப்கானித்தானின் ஆட்சியாளர் அமீர் மற்றும் அவரது அரச குடும்பத்தினரின் ஆதரவுடன் இவ்வரசு நிறுவப்பட்டது. இவ்வரசுக்கு செர்மனி,சப்பான், குரோசியா, பர்மா, பிலிப்பைன்சு, துருக்கி ஆகிய நாடுகள் அதரவு தெரிவித்தன. தமது சதந்திரப் கருத்துக்களை உலகெங்கும் இவ்வரசின் மூலம் பரப்பினர்.

இவ்வரசிற்கு ஜனாதிபதியாக ராஜா மகேந்திரப் பிரதாப்பும், பிரதமராக மௌலானா பர்ஹத்துல்லாவும், வெளிவிவகார அமைச்சராக செம்பகராமன் பிள்ளையும், பதவிவகித்தனர். ராஜா மகேந்திரப் பிரதாப்பின் இந்தியச் சுதந்திரம் பற்றிய கட்டுரைகள் அன்றைய ஆப்கானிஸ்தானின் செல்வாக்கு மிக்க பத்திரிகையாகிய சிறாஜ் அல் – அக்பர் பத்திரிகை மூலம் வெளியுலகெங்கும் பரப்பப்பட்டது. நாடுகடந்த இந்திய அரசு வெற்றிகரமாக இயங்கியதோடு தமக்குச் சாதகமான நேச நாடுகளைத் திரட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் எட்டியிருந்தது.

ஆப்கானிஸ்தானில் இயங்கிய இந்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆங்கிலேயர்களின் நெருக்கடி காரணமாக ஆப்கான் அரசு 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. இதனால் இவ்வரசு தோல்வியில் முடிவடைந்தது. இவ்வரசின் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்த செம்பகராமன் பின்னர் இட்லரின் செர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான எம்டன் கப்பலின் படைத்தலைவராகினார்.

இக்கப்பல் பின்நாளில் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித சார்ச் கோட்டையிலும் (பின்னர் தமிழ்நாடு அரசுச் செயலகமாகவும், தற்போது பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகமாவும் செயல்பட்டு வருகின்றது), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் இக்கப்பல் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.

இரண்டாம் அரசு[தொகு]

முதல் அரசின் தோல்விக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் நாடுகடந்த இந்திய அரசு நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது அரசு ஆசாத் ஹிந்த் அரசு என்ற பெயரில் அக்டோபர் 21, 1943ல் சிங்கப்பூரில் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அந்தமான், நிக்கோபார் தீவுகளும், அசாம், நாகாலாந்தின் சில பகுதிகளும், பர்மாவின் சில பகுதிகளும் இவ்வரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இதன் பிரதமராக இந்திய தேசிய இராணுவம் என்ற விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த நோதாஜி சுபாஸ் சந்திர போஸே பொறுப்பேற்று இந்தியச் சுதந்திரத்திற்காக இராணுவ முறைமையிலான போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் சென்றார்.

இவ் இந்திய ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தனியான வங்கி, பணம், நீதிமன்றம் என ஒரு அரசுக்குரிய நிர்வாக பிரிவுகளை நிறுவியதோடு அதை திறம்படவும் செயற்படுத்தியிருந்தது. இவ்வரசு செர்மன், துருக்கி, சப்பான், குரோசியா, பர்மா, மன்சூக், பிலிப்பைன்சு முதலான ஒன்பது நாடுகளுடன் அரசாங்க உறவுகளைக் கொண்டிருந்தது. ஆனால் அது முழுமையாக யப்பானின் உதவியுடனேயே இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால் இரண்டாம் உலகப் போரில் சப்பானின் தோல்வியையடுத்து இந்த அரசம் அதன் தலைவரும் மறைந்து போயினர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இடைக்கால_அரசு&oldid=2975679" இலிருந்து மீள்விக்கப்பட்டது