இந்திய தேசியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு அரசியல் சமூகங்களை இணைத்து 1947 ஆண்டு அமைக்கப்பட்ட சுதந்திர கூட்டரசே இந்தியா. சட்டபூர்வமாக இந்தியா ஒரு பல்லின, பன்மொழி, சமயசார்பற்ற தேசம். அது ஒருமித்த அரசியல் வரலாற்று பண்பாட்டு இழைகளால் இணைக்கப்பட்டது. இந்திய தேசியம் இந்தியாவின் நலன்களையும் ஒருமைப்ப்பாடையும் பேணி முன்னெடுக்க உதவும் கருத்துருவாக்கம் ஆகும்.
பொருளடக்கம் |
இந்திய தேசியத்தின் கருத்து நிலைகள் [தொகு]
இந்துத்துவ தேசியவாதம் [தொகு]
இந்திய தேசியத்தின் தீவர வடிவங்களில் ஒன்று இந்துதத்துவம் ஆகும். இது இந்தியாவின் மொழி இந்தி மொழி, இந்தியாவின் சமயம் இந்து சமயம் என்று நிலை நாட்ட முனைகிறது. இந்திய பண்பாட்டை பேணும் செயற்பாட்டில் இது இந்திய மரபின் சாதி அமைப்பை அப்படியே பேண தலைப்படுகிறது.
இந்திய தேசியம் நோக்கி விமர்சனங்கள் [தொகு]
| “ | "இந்தியாவை பலம் மிகுந்த ஒரு இராணுவ வல்லரசாக மாற்ற வேண்டும்" என்பதே "ஏழ்மை அதிகமான நாட்டிலும்" இந்திய அரசியல்வாதிகள் சுதந்திரம் அடைந்ததில் இருந்து முன்னெடுத்த முக்கியமான செயல்திட்டம். இந்தியாவை ஒரு இராணுவ சக்தியாக மாற்றுவதன் மூலம் ஒரு போலியான தேசியவாதத்தை இந்திய மக்களிடம் ஊட்டவதும், இந்தியா பலம் வாய்ந்த ஒரு நாடு என்பதாக தன் மக்களிடமும் பிற நாடுகளிடமும் வெளிப்படுத்துவதும் இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் "இந்தியனாக நீ பெருமை கொள்ள வேண்டும்" என்று கூறுவதும், இந்திய துணைக்கண்டத்தின் பல் வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை "இந்தியன்" என்ற தட்டையான ஒரு வடிவத்தில் அடக்க முனைவதும் இந்திய தேசியவாதிகளின் தந்திரம். | ” |
- சசி [1]
இந்தியா ஒளிரவில்லை [தொகு]
| “ | எல்லா நாடுகளையும் போல, எங்கள் வாழ்க்கையும் வளமாகப் போகிறது என்றெண்ணித்தான் விடுதலைப் பயணம் தொடங்கியது, இந்திய விடுதலைக்குப் பின்னால் தொடர்ந்து சுரண்டப்பட்ட எங்கள் உழைப்பு, இப்போது அம்பானி வீட்டுக் கழிவறைகளாய் மாறி நறுமணம் வீசுகிறது. அரசுகள் கொடுக்கும் இலவசங்களில் தொடங்கிய இந்தியர்களின் வீழ்ச்சி இப்போது விவசாயிகளின் தற்கொலையில் நின்று கைகொட்டிச் சிரிக்கிறது. | ” |
- கை. அறிவழகன் [2]