கே. எம். முன்ஷி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிமம்:K-M-Munshi.jpg
கே.எம்.முன்ஷி
கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (Kanhaiyalal Maneklal Munshi, குசராத்தி: કનૈયાલાલ માણેકલાલ મુનશી) (திசம்பர் 30, 1887 - பிப்ரவரி 8, 1971) குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். தொழில்முறை வழக்கறிஞரான இவர் பின்னாளில் இலக்கியம் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டார். குசராத் இலக்கியத்தில் மிகவும் அறியப்பட்டவர்.